“இரண்டு தம்பிகளை இழந்து இருக்கிறேன்”.. கண் கலங்கிய சூர்யா..!

 
1

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நேற்று தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் ஆந்திராவை சேர்ந்த ரசிகர்கள் சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட போது மின்சாரம் தாக்கி இரண்டு ரசிகர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சூர்யா அந்த ரசிகர்களின் குடும்பத்தாரிடம் வீடியோ காலில் பேசியுள்ளார். அப்போது எனது இரண்டு தம்பிகளை இழந்து இருக்கிறேன் என கண்ணீருடன் பேசியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட ரசிகரின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்து கொடுப்பதாகவும் உறுதி அளித்துள்ளார். இந்த வீடியோவை ஜூனியர் என் டி ஆர் ரசிகர்கள் பகிர்ந்து சூர்யாவுக்கு நன்றி கூறியுள்ளனர்.


 


 

From Around the web