இப்படி ஒரு பேய் படத்தை என் வாழ்நாளில் நான் பார்த்ததில்லை... டிமாண்டிக் காலணி 2 வின் முதல் விமர்சனம்..!

 
1
டிமாண்டி காலனி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார் அஜய் ஞானமுத்து. 

இந்த திரைப்படம் பிளாக் பாஸ்டர் ஹிட் ஆனது.

இதை தொடர்ந்து நயன்தாரா, விஜய் சேதுபதி, அதர்வா, அனுராக் கஷ்யப் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் இமைக்கா நொடிகள் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படமும் அமோக வரவேற்பு பெற்றது.

அதன் பின்பு சீயான் விக்ரம் நடிப்பில் கோப்ரா திரைப்படத்தை இயக்கினார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் ரிலீஸ் ஆகி படு தோல்வியை சந்தித்தது.

தற்போது மீண்டும் கம்பேக் கொடுக்க வேண்டும் என முடிவெடுத்த அஜய் ஞானமுத்து, டிமான்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார். அதில் அருள்நிதிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இந்த திரைப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில், இந்த படத்தின் ஸ்பெஷல் ஷோ பார்த்த விநியோகஸ்தர் ஒருவர் முதல் விமர்சனத்தை கூறியுள்ளார். அதன்படி அவர் கூறுகையில், வாவ் டிமாண்டி காலனி 2 என்ன ஒரு அற்புதமான திரைக்கதை. இந்திய திரை உலகம் ஆகஸ்ட் 15ஆம் தேதி அஜய் ஞானமுத்துவின் திரைக்கதையை பற்றி தான் பேசப்போகிறது. மகாராஜாவுக்கு பிறகு டிமாண்டி காலனி 2 படத்தின் வெளிநாட்டு உரிமையை கைப்பற்றதில் நாங்கள் மிகவும் லக்கி எனக் குறிப்பிட்டுள்ளார்.

இன்னொரு பதிவில் டிமான்டி காலனி 2 மாதிரி ஒரு பேய் படத்தை என் வாழ்நாளில் நான் பார்த்ததில்லை. இரண்டரை மணி நேரமும் நான் போனை பாவிக்கவில்லை.  சீட் நுனியில் அமர்ந்துதான் படம்  பார்த்தேன். தற்போது விமர்சகர்களுக்காக வருந்துகின்றேன் எப்படி இந்த படத்தில் குறை கண்டுபிடிக்க போகின்றார்கள் என பதிவிட்டுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் இந்த படம் ரிலீசுக்கு முன்னாடியே இப்படி பயமுறுத்துறீங்களே என கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.

From Around the web