பிளஸ் 2 தான் படிச்சிருக்கேன் ..!!

 
1

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடர் மூலம் பிரபலமானவர் ஆல்யா மானசா. தற்போது ராஜா ராணி சீசன் 2 விலும் கதாநாயகியாக நடிக்கிறார். சீசன் 1-ல் வேலைக்காரியாக நடித்திருந்த ஆல்யா, சீசன் 2 வில் டிகிரி படித்த பெண் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் சமீபத்தில் தனது ரசிகர்களுடன் உரையாடல் ஒன்றை நிகழ்த்தினார். அதில் ஒருவர் ஆல்யாவிடம் நீங்கள் உண்மையில் என்ன படித்திருக்கிறீர்கள் என கேட்டார். அதற்கு பதிலளித்த ஆல்யா, ’12-ஆம் வகுப்பு தான் முடித்துள்ளேன். சென்னை எத்திராஜ் கல்லூரியில் பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் சேர்ந்தேன். ஆனால், படிப்பை தொடர முடியவில்லை’ என கூறியுள்ளார்.

ஆல்யா மானாசாவின் இந்த பதிலை கேட்ட ரசிகர்கள் ஆச்சரியத்தில் உறைந்துள்ளனர்
 

From Around the web