”விவாகரத்து குறித்து கவலைப்படுவதை நிறுத்திவிட்டேன்” நாக சைத்தன்யா..!

 
நாக சைத்தன்யா

சமந்தாவும் நாக சைத்தன்யாவும் பிரியவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் முதன்முறையாக இந்த விவகாரம் குறித்து நடிகர் நாக சைத்தன்யா மனம் திறந்து பேசியுள்ளார்.

சேகர் கம்மூலா இயக்கத்தில் நாக சைத்தன்யா மற்றும் சாய் பல்லவி நடித்துள்ள ‘லவ் ஸ்டோரி’ திரைப்படம் திரைக்கு வந்துள்ளது. இதற்கான ப்ரோமோஷன் பணிகள் நடந்து வருகின்றன. அதில் நடிகர் நாக சைத்தன்யா ஆர்வமுடன் பங்கேற்று வருகிறார்.

சமீபத்தில் அவர் பங்கேற்ற நிகழ்வில் நிருபர் ஒருவர் சமந்தாவை பிரியவுள்ளது குறித்த வெளியாகும் செய்திகள் குறித்து பேசினார். தனிப்பட்ட வாழ்க்கைக்கும் திரைத்துறைக்கு வாழ்க்கைக்கும் இருக்கும் வேறுபாட்டை அறிந்தவன் நான்.  தந்தையும் தாயும் என்னை அப்படி தான் வளர்த்தனர்.

அது நல்ல பழக்கம் என்பதால் அதை நான் பின்பற்றி வருகிறேன். மனைவி சமந்தாவை நான் பிரியவுள்ளதாக வெளியாகி வரும் செய்தி எனக்கு மிகுந்த வேதனையை தருகிறது. ஒரு செய்தியை மறக்கடிக்க இன்னொரு செய்தி உருவாக்கப்படுவதை நான் நிறைய பார்த்துவிட்டேன். 

பழைய செய்தியை மறக்கடிக்க புதிய செய்தி. இந்த புரிதல் எனக்குள் வந்தவுடன் நானும் இதுகுறித்து கவலைப்படுவதை நிறுத்திவிட்டேன் என்று நாக சைத்தன்யா அந்த செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
 

From Around the web