இந்த படத்தை நான் நாற்பது தடவைக்கு மேல் பார்த்திருக்கிறேன்:ரஜினிகாந்த்..!

 
1

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதற்கிடையில் ரஜினி நெல்சனின் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்றும் அறிவிப்பு வந்தது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் உருவாகும் ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில மாதங்களில் துவங்கவுள்ளதாம்.

இவ்வாறு பிசியாக பல படங்களில் கமிட்டாகியிருக்கும் ரஜினிகாந்த் அடுத்தடுத்து பல இயக்குனர்களிடமும் கதை கேட்டு வருகிறாராம். இதெல்லாம் ஒருபக்கம் இருக்க ரஜினி அதிகமுறை பார்த்த படங்கள் என்னென்ன என்பது பற்றி ஒரு நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினி, நான் அடிக்கடி மூன்று படங்களை பார்ப்பேன். ஒன்று காட் ஃபாதர், அதைத்தொடர்ந்து திருவிளையாடல் மற்றும் கமல் நடித்த ஹே ராம். இதில் ஹே ராம் திரைப்படத்தை நாற்பது முறைக்கு மேல் பார்த்துள்ளேன். ஒவ்வொருமுறை ஹே ராம் படத்தை பார்க்கும்போதும் எனக்கு புதுசா இருக்கும். ஒவ்வொருமுறையும் ஹே ராம் திரைப்படம் புது புது அனுபவத்தை தரும் என்றார் ரஜினிகாந்த்.

இவ்வாறு கமல் நடித்து இயக்கிய ஹே ராம் திரைப்படத்தை ரஜினி வெகுவாக பாராட்டி பேசியிருந்தார். இது மட்டுமல்லாமல் கமலின் பல படங்களை வெகுவாக பாராட்டி பேசியிருக்கிறார் ரஜினி. மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த நாயகன் திரைப்படம் ரஜினிக்கு மிகவும் பிடித்த படமாகும். அப்படத்தை பார்த்து மற்ற இயக்குனர்கள் மற்றும் நடிகர்களிடம் கமலை வெகுவாக பாராட்டி பேசியிருக்கிறார் ரஜினி.

என்னதான் கமல் மற்றும் ரஜினி இருவரும் போட்டியாளர்கள் என வெளியே பலர் பேசினாலும் இருவரும் இன்றுவரை நெருங்கிய நண்பர்களாகவே இருக்கின்றனர். கமல் கூட ஒருமுறை ஒரு நிகழ்ச்சியில், என்ன இருந்தாலும் என்னையும் ரஜினியையும் போல ஒரு சிறந்த நண்பர்களை பார்க்கமுடியாது என கூறியிருப்பார். அந்தளவிற்கு இருவரும் காலம் கடந்தும் நண்பர்களாக இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web