அஜித் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டேன் : பிரபல நடிகர் வருத்தம்..!

 
1

மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த "குட் பேட் அக்லி" திரைப்படம் உலகளவில் ரூ. 285 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. 

இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரியா வாரியர் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். மேலும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் "குட் பேட் அக்லி" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருந்தாலும் அதனை தவற விட்டுள்ளதாக பிரபல நடிகர் ஆர்.கே. சுரேஷ் பேட்டி ஒன்றில் குறிப்பிடுள்ளார்.

குறித்த பேட்டியில் "இந்த படத்தில் ஒரு முக்கிய ரோல் செய்ய வாய்ப்பு இருந்தது. ஆனால் என் காலதாமதம் மற்றும் availability காரணமாக அது அமையவில்லை. திரையில் படத்தை பார்த்தபோது அந்த ரோலை மிஸ் செய்துவிட்டேன் என்பதில் வருத்தம் இருந்தது" என்று அவர் பகிர்ந்துள்ளார்.

From Around the web