எங்க அண்ணா அண்ணி அஜித் ஷாலினியை மிகவும் நேசிக்கிறேன்.!நடிகர் சதிஷின் எக்ஸ் தள பதிவு..!

 
1

"குட் பேட் அக்லி " திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூல் ரீதியில் சாதனை படைத்து இருந்தது. 

இந்த நிலையில் உலகளவில் ரூ. 285 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதுடன். தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தான் தனது 64வது படத்தில் அஜித் நடிக்கஇருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த படத்திற்கான அறிவிப்பு வெளிவரும் என சினிமாத்துறையினர்  கூறிவருகின்றனர் .

மேலும் தமிழ் சினிமாத்துறையில்  முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக  வலம் வருபவர் சதீஸ். இவர் தற்போது நகைச்சுவை கதாபாத்திரங்களில் இருந்து விலகி முழுமையாக ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது கான்ஜுரிங் கண்ணப்பன், சட்டம் என் கையில் என ஹீரோவாக தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்துள்ளார். 

இந்த நிலையில்  அஜித் மற்றும் ஷாலினியை நேரில் சென்று சந்த்தித்துள்ளார்.அங்குஎடுத்த புகைப்படத்தினை சதிஷ் தனது எக்ஸ்தள பக்கத்தில பதிவிட்டுள்ளார் .மேலும் அந்த பதிவில் "மிகவும் பணிவான, மென்மையான மனிதர் அஜித் அண்ணாவையும் ஷாலினி அன்னியையும் மிகவும் நேசிக்கிறேன் " என்ற பதிவு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றதுடன் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


 

From Around the web