எனக்கு இப்படிப்பட்ட பெண் தான் தேவை : VTV கணேஷிடம் சொன்ன சிம்பு..! 

 
1

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்த சிம்பு காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இடையில் சில தோல்விகளால் துவண்டிருந்த சிம்பு மாநாடு என்ற படத்தின் மூலம் மாஸ் கம்பேக் கொடுத்தார். வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றதை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, பத்து தல என அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்தார் சிம்பு. இதைத்தொடர்ந்து தன் அடுத்த படமான STR 48 படத்திற்காக தயாராகி வரும் சிம்புவிற்கு கமலுடன் இணைந்து தக்லைப் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் தக்லைப் திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டு சிம்பு அடுத்ததாக STR 48 படப்பிடிப்பில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் STR 48 திரைப்படம் சிம்புவின் திரைப்பயணத்திலேயே அதிக பொருட்ச்செலவில் உருவாகும் படமாக இருக்கும் என சொல்லப்படுகின்றது.

இந்நிலையில் என்னதான் சிம்பு தற்போது வெற்றிமுகத்தில் இருந்தாலும் அவரது ரசிகர்களுக்கு ஒரு சின்ன வருத்தம் இருந்து வருகின்றது. எப்போது தலைவனுக்கு கல்யாணம் ஆகும் என்பது தான் சிம்பு ரசிகர்களின் கவலையாக இருந்து வருகின்றது. விரைவில் சிம்புவிற்கு திருமணமாகும் என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு இருக்கின்றது.

இதையடுத்து சிம்பு தனக்கு எப்படிப்பட்ட பெண் தேவை என பல வருடங்களுக்கு முன்பு கொடுத்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது. அந்த பேட்டியில் பிரபல நடிகர் VTV கணேஷிடம் சிம்பு பேசுகையில், எனக்கு காபி போட்டுக்கொடுத்து, சமைத்து கொடுத்து, என் வேலைகளை செய்துகொடுக்கும் பெண் தேவையில்லை. அதற்கு தான் வேலையாட்கள் இருக்கின்றார்களே. எனக்கு என்னை டாமினேட் செய்யும் பெண் தான் தேவை. அந்த பெண்ணின் பேச்சை கேட்டு நான் நடக்கணும் என்றுதான் ஆசைப்படுகின்றேன். அப்படி ஒரு பெண் எனக்கு மனைவியாக வரவேண்டும் என நினைக்கிறேன் என்றார் சிம்பு. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

From Around the web