எனக்கு விஜயகாந்த் சொன்ன வார்த்தைகள் இன்னும் நியாபகம் இருக்கு -நடிகர் ஸ்ரீகாந்த்..! 

 
1

சினிமா அரசியல் என இரண்டிலும் முடிசூடா மன்னனாக வலம் வந்த கேப்டன் விஜயகாந்தின் மரண செய்தி கேட்டு தமிழகமே சோக கடலில் மூழ்கியுள்ளது.அவரது உடலுக்கு நடிகர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் நேரில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர் .

இதையடுத்து நேற்று மாலை அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் ஸ்ரீகாந்த் கேப்டன் குறித்து உருக்கமாக பேசியுள்ளார் .

இதே டிசம்பர் மாதம் தான் நான் ஒருமுறை உயிருக்கு போராடி கொண்டிருந்தேன். அப்போது சூட்டிங்கில் இருந்த விஜயகாந்த் கேமராமேனை அழைத்து, ‛‛அந்த தம்பி காசு வைத்திருப்பானா என தெரியவில்லை. மருத்துவமனைக்கு சென்று ஆபரேஷனுக்கு உதவி செய்யுங்கள். விமானத்தில் அழைத்து கூட சிகிச்சை அளியுங்கள்’’ என நடிகர் ஸ்ரீகாந்த் உருக்கமாக சொல்லியுள்ளார் .

From Around the web