ஞாயிற்றுக்கிழமை வெளியே சாப்பிடக்கூடாது என புரிந்து கொண்டேன்..! நான் கேட்டது வேற ஆனா அவர் கொடுத்தது வேற...!

 
1

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீனாவாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ஹேமா முதல் முதலில் சின்னத்திரையில் அறிமுகமானது ஆபீஸ் சீரியல் மூலமாகத்தான். இந்த சீரியலுக்கு பிறகு தான் பொன்னூஞ்சல், தென்றல், சின்னத்தம்பி, குலதெய்வம் மற்றும் மெல்ல திறந்தது கதவு என்று பல சீரியல்களில் நடித்திருக்கிறார். சீரியலில் மட்டுமல்லாமல் ஒரு சில சினிமாக்களிலும் நடித்திருக்கிறார். அதிலும் ஆறாவது சினம், இவன் யார் என்று தெரிகிறதா, வீரன் என பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் சினிமாவில் போல இவருக்கு திரைப்படங்களில் பிரபலம் கிடைக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் ஹேமா திரைப்படங்களுக்கு வருவதற்கு முன்பே காவல்துறையில் ஹார்டுவேர் இன்ஜினராகத்தான் கம்ப்யூட்டர் ஒர்க் வேலை பார்த்து வந்தாராம். ஆனால் நடிப்பின் மீது இருந்து ஆசையின் காரணமாக மாடலின் மூலமாக இவர் சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார். இவர் எதிர்பார்த்த அளவிற்கு இவருக்கு பெரிய பிரபலத்தை கொடுத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். இந்த சீரியலில் முதல் பாகத்தில் இவர் வில்லியா? கதாநாயகியா? என்று யூகிக்க முடியாத அளவிற்கு தான் ஆரம்பத்தில் இவருடைய கேரக்டர் இருந்தது.

பிறகு மீனாவுக்கு என்று தனி ரசிகர்கள் தொடங்கிவிட்டனர். அதனால்தான் அந்த சீரியல் முடிவடைந்ததும் இரண்டாவது பாகம் தொடங்கப்படும் போது கூட இவரே மீனாவாக நடிக்க வைத்து விட்டனர். அது போல சீரியலில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் போட்டோ சூட் மற்றும் வீடியோ வெளியிடுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். தன்னுடைய மகனோடு தான் எடுக்கும் வீடியோக்களை தன்னுடைய youtube பக்கங்களில் பகிர்ந்து வருகிறார். அதுபோல சூட்டிங் ஸ்பாட்டில் நடக்கும் நிகழ்வுகளையும் அடிக்கடி வீடியோக்களாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஞாயிற்றுக்கிழமை நகை வாங்கிய வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அப்போது அந்த நகையை டிநகரில் வாங்கிவிட்டு அங்கேயே ஒரு ஹோட்டலில் சாப்பிட்டேன் ஆனா அந்த ஹோட்டலில் நாங்கள் கேட்டது ஒன்னு அவர்கள் கொடுத்தது ஒன்னு. இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் சிலர் கொடுத்த ரிவ்யூவை நம்பி தான் அந்த ஹோட்டலுக்கு போனேன். ஆனால் அங்கு சாப்பாடு அவ்வளவு மோசமாக இருந்தது. ஹோட்டலில் மெனுவில் மீன் சாப்பாடு என்றால் விதவிதமான மீன் குழம்புகளை காட்டி இருந்தார்கள். ஆனால் சாப்பாடு தந்ததில் ஒரே ஒரு மீன் பீஸ் மட்டும் தான் இருந்தது. ஆனால் பில்லு மட்டும் 500 ரூபாய் ஆகிவிட்டது. இது ரொம்ப மோசமான அனுபவமாக இருந்தது. தி.நகரில் இப்போ எல்லாம் நடக்கவே முடியல. அவ்வளவு ட்ராபிக்காக இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை வெளியே சாப்பிடக்கூடாது என்று நான் அப்போ புரிந்து கொண்டேன். ஞாயிற்றுக்கிழமை பலருடைய வீட்டில் சமைப்பதே இல்லை என்று தெரிகிறது. எந்த ஹோட்டலுக்கு போனாலும் அங்கு கூட்டம் அதிகம் இருக்கிறது என்று அந்த வீடியோவில் ஹேமா பேசியிருக்கிறார்.

From Around the web