அடுத்த ட்விஸ்ட்க்கு ரெடியான சிறகடிக்க ஆசை..! நாளை முத்து - அருண் சந்திக்க போறாங்க..!

இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் நாடகத்தில் ரவி ரெஸ்டாரண்ட் கிளம்பி போக, நீ அங்க போக வேண்டாம். வேற ரெஸ்டாரண்ட்ல வேலை பாரு. நீத்து உன்னை யூஸ் பண்ணிக்கிறா என்கிறாள். ஆனால் ரவி அப்படியெல்லாம் வேலையை உடனே விட முடியாது என்கிறான். இதனால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றுகிறது. நீ வேலையை விட்டு நின்னா தான் உன்னோட அருமை புரியும் என்கிறாள் ஸ்ருதி.
அதற்கு ரவி இப்போதைக்கு இதைப்பத்தி பேச முடியாது. நான் ரெஸ்டாரண்ட் கிளம்புறேன் என சொல்லிவிட்டு போகிறான். இதனால் ஸ்ருதி அப்செட் ஆகிறாள். இதனிடையில் அருணின் வீட்டுக்கு சீதா வருகிறாள். அப்போது அவனுடைய அம்மா அப்செட்டாக இருக்க, என்னாச்சு என விசாரிக்கிறாள். மறுபடியும் அருணை சஸ்பென்ட் பண்ணிட்டாங்க. என்ன பிரச்சனைன்னு தெரியலை. ரூம்ல இருக்கான் என சொல்கிறாள். இதனையடுத்து சீதா உள்ளே போய் அவனிடம் பேசுகிறாள்.
அவன் முத்து தன்னுடைய வண்டி மீது காரை விட்டு மோதியதை பற்றி சொல்கிறான். அந்த டிரைவருக்கு என்கூட என்ன பிரச்சனைன்னு தெரியலை. அவனால ரெண்டாவது தடவை எனக்கு சஸ்பென்ட் கிடைச்சு இருக்கு என எரிச்சலாக சொல்கிறான். அதற்கு சீதா உங்க ரெண்டு பேருக்கும் இடைல ஈகோ பிரச்சனைன்னு நினைக்கிறேன். நம்ம இந்த சஸ்பென்டை யூஸ்புல் ஆக்கிக்கலாம். நான் என் அக்காவையும், மாமாவையும் உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன்.
நாளைக்கு கோயிலுக்கு வாங்க என சொல்கிறாள். இதனால் அருண் ஹேப்பி ஆகிறான். இப்படியாக இருவரும் சந்தோஷமாக பேசி கொண்டிருப்பதை பார்த்து அவனுடைய அம்மா நிம்மதி அடைகிறாள். மற்றொரு பக்கம் அம்மாவை பார்ப்பதற்காக கோயிலுக்கு வருகிறாள் மீனா. அப்போது அவள், சீதாவோட நடவடிக்கை எதுவும் சரியில்லை. எப்போ பார்த்தாலும் போன் பேசிட்டே இருக்காள். சாப்பிடும் போது கூட யாருக்கோ மெசேஜ் பண்ணிட்டு இருக்கா என சொல்கிறாள்.
அதற்கு மீனா நம்ம சீதா அப்படியெல்லாம் தப்பு பண்ண மாட்டாள். நீ அதெல்லாம் எதுவும் நினைக்காதாம்மா என சொல்கிறாள். அப்போது சீதாவும் அங்கு வந்து விட, மீனாவிடம் தனியாக பேசுகிறாள். நாளைக்கு அருணை அறிமுகப்படுத்தி வைப்பதாக சொல்கிறாள். இதனிடையில் சிட்டியிடம் நகை வாங்கிவிட்டு வீட்டுக்கு வருகிறாள் ரோகிணி. அவள் வந்ததும் எங்கடி சுத்திட்டு வர என விஜயா கேட்கிறாள். உடனே அவளிடம் வந்து ஒரு கிளைன்ட் ஆர்டர் வந்தது.
அதுல வந்த பணத்துல உங்களுக்கு செயின் வாங்கிட்டு வந்து இருக்கேன் என கொடுக்கிறாள். விஜயா அதை வாங்காமல் இருக்க ரவி, ஸ்ருதி இருவரும் அதை கவனிக்கின்றனர். ஆண்ட்டி கண்டிப்பாக அந்த செயினை வாங்குவாங்க என சொல்ல, அம்மா அதெல்லாம் வாங்க மாட்டாங்க என ரவி பெட் கட்டுகின்றனர். விஜயா எனக்கு எதுக்கு நகை வாங்கிட்டு வந்த என கேட்க, எல்லாம் உங்களை ஐஸ் வைக்கத்தான் என்கிறாள் ஸ்ருதி. இதனால் ரோகிணி அவளை பார்த்து முறைக்க, அங்க என்ன முறைக்கிற? ஸ்ருதி சொல்றது கரெக்ட் தான என்கிறாள்.
அதற்கு ரோகிணி உங்களுக்கு சூப்பரா இருக்கும் ஆண்ட்டி. அதுக்காக தான் வாங்கிட்டு வந்தேன் என்கிறாள். மனோஜும் வாங்கிகோக்கம்மா. உங்களுக்காக தான வாங்கிட்டு வந்து இருக்காள் என சொல்கிறான். உடனே விஜயா அவளுக்கு சப்போர்ட் பண்ணிட்டு வர்றியா என முறைக்கிறாள். ரோகிணி அங்கே நகையை வைத்துவிட்டு, உங்களுக்காக தான் வாங்கிட்டு வந்தேன் என சொல்லிவிட்டு உள்ளே போகிறாள்.
அப்போது முத்து, மீனா அங்கு வருகின்றனர். நகையை வைத்து நடக்கும் வேடிக்கையை பார்த்துவிட்டு, அம்மாவுக்கு நகை வேணாம்ல. நீ வைச்சுக்கோ என சொல்லிவிட்டு கையில் எடுக்கிறான் முத்து. உடனே விஜயா, இது எனக்காக வாங்கிட்டு வந்ததுடா என சொல்லிவிட்டு நகையை வாங்கிவிட்டு உள்ளே போகிறாள். இதனால் ரவி ஏமாந்து போகிறான். அண்ணாமலையும் அவள் நகை வாங்குவாங்கன்னு எனக்கு முன்னாடியே தெரியும்டா என சொல்கிறார்.
அதன்பின்னர் மீனா கிச்சனில் இருக்கும் போது முத்து போய், பார்லர் அம்மா எப்படி பிளான் பண்ணி நகையை வாங்கிட்டு வந்துருக்கு பாரு என சொல்கிறாள். அப்போது மீனா, சீதா ஒரு பையனை லவ் பண்றாள். அவரை நாளைக்கு நம்மக்கிட்ட அறிமுகப்படுத்தி வைக்கிறேன் சொல்லிருக்கா என்கிறாள். இதனைக்கேட்டு முத்து ஷாக்காகிறான். இப்படியாக இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் நிறைவடைந்துள்ளது.