’இந்தியன்’ படத்தை எடுக்கும் போது நான் ஜூனியர் ஆர்டிஸ்ட்... அதுவே ’இந்தியன் 2’ படத்தில்... 

 
1
ஒரு கதை எழுத போதே அந்த கதையில் என்னென்ன கேரக்டர் யாருக்கு பொருந்தும் என்பதை இயக்குனர்கள் சரியாக எழுதி விடுவார்கள், அப்படித்தான் ’இந்தியன் 2’ படத்தில் ஒரு கேரக்டரை எழுதும்போது உங்களை மனதில் வைத்து தான் எழுதினேன் என்று ஷங்கர் அவர்கள் என்னிடம் கூறிய போது நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.

ஒரு கேரக்டரில் நடிக்க வேண்டிய நடிகர் என்பவர் தானாகவே அதில் செலக்ட் ஆகி விடுவார், நாம் எந்தவித முயற்சியும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறினார். இதே ஷங்கர் ’இந்தியன்’ படத்தை எடுக்கும்போது நான் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக நடிக்க வரிசையில் நின்றேன். அப்போது என்னுடைய பெயரை கூட எழுதாமல் விரட்டி விட்டு விட்டார்கள். ஆனால் அதே ஷங்கர் இன்று என்னை ’இந்தியன் 2’ படத்திற்காக என்னை கூப்பிட்டு உள்ளார், எனக்காக ஒரு கேரக்டரை உருவாக்கி உள்ளார், அதுதான் விதி, என்று சமுத்திரக்கனி கூறினார்.

மேலும் ஒரு படத்தை நாம் கஷ்டப்பட்டு எடுத்தால் அதை குறை சொல்வதற்கு என்று ஒரு பெரும் கூட்டம் இருக்கும், நம்முடைய வேலை படத்தை எடுத்து ரசிகர்களுக்கு கொடுப்பது மட்டும்தான், அதன்பின் என்ன என்பதை நாம் யோசிக்க கூடாது என்று கூறினார்.

From Around the web