”குக் வித் கோமாளியை விட்டு விலகிவிட இருந்தேன்- ஆனால்..” மனம் திறந்த ஷகீலா..!
 

 
”குக் வித் கோமாளியை விட்டு விலகிவிட இருந்தேன்- ஆனால்..” மனம் திறந்த ஷகீலா..!

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மொத்தமாக வெளியேற திட்டமிட்டு, பிறகு முடிவை மாற்றியது குறித்து நடிகை ஷகீலா மனம் திறந்து பேசியுள்ளார்.

கடந்த வாரம் நிறைவடைந்த குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விரைவில் எப்போது புதிய சீசன் துவங்கும் என்று ரசிகர்கள் கேட்கும் அளவுக்கு இந்நிகழ்ச்சி ஒவ்வொரு தொலைக்காட்சி பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் வெற்றியாளராக கனி திரு அறிவிக்கப்பட்டார். இரண்டாவது இடத்தை பிடித்தார் ஷகீலா. இந்நிலையில் பல்வேறு நேர்காணல்களில் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி குறித்து மனம் திறந்து பேசி வருகிறார்.

அப்போது இந்நிகழ்ச்சியில் பல மணி நேரம் நின்று சமைக்க வேண்டும். உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் தனக்கு முடியாது என்பதால் நிகழ்ச்சியை விட்டு வெளியேற முடிவெடுத்தது குறித்து சமீபத்திய பேட்டியில் ஷகீலா தெரிவித்துள்ளார்.

அப்போது அவரோடு புகழ் காம்பினேஷனில் இருந்துள்ளார். அன்றைய நிகழ்ச்சியில் பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால் பல ஆண்டுகளுக்கு பிறகு தான் மனம் விட்டு சிரித்ததாகவும், அதை தொடர்ந்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் முடிவை மாற்றிக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார் ஷகீலா. இந்த காணொளி ரசிகர்களிடையே பரவலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

From Around the web