நானும் பாலியல் சீண்டல்களுக்கு ஆளானேன் - சிம்ரன் பரபரப்பு பேட்டி..! 

 
1

90ஸ் காலகட்டத்தில் பலரின் கனவு கன்னியாக வலம் வரும் நடிகை சிம்ரன் தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளார்.

அதாவது தானும் பாலியல் சீண்டல்களுக்கு ஆளானதாக கூறிய சிம்ரன், ஒரு பெண்மீது பாலியல் வன்முறை நடத்தப்படுகின்றது என்றால் உடனே ஏன் வெளியே சொல்லவில்லை என்று கேட்கின்றார்கள். இது ஒரு கேள்வியா? அது எப்படி உடனே சொல்ல முடியும். 

சில நேரங்களில் நம்மைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பதை புரிந்து கொள்ளவே நேரம் தேவை.  பொறுமையாக நாம் உட்கார்ந்து யோசித்துதான் அதற்கு ரியாக்ட்  கொடுக்க முடியும். அதற்கு அவகாசம் உங்களுக்கும் தேவை. 

என்னிடம் அப்படி தவறாக பேசினால் 100% உடனடியாக அப்போதே என் எதிர்ப்பை தெரிவித்து விடுவேன். சின்ன வயதிலிருந்தே நான் இந்த மாதிரியான பிரச்சினைகளை நிறைய முறை சந்தித்துள்ளேன். ஆனால் என்னால் இப்போது அதையெல்லாம் சொல்ல முடியாது. உங்களுக்கு என்ன பிரச்சனை வந்தாலும் அதை எதிர்த்து போராட வேண்டும் அமைதி காக்க கூடாது அப்படி செய்வது தவறு என்று கூறியுள்ளார்.

From Around the web