”என்னை ஈர்த்தவர் லாரன்ஸ்” கங்கனா ரனாவத் பளீச்..!!
தமிழில் தாம் தூம், தலைவி ஆகிய படங்களை தொடர்ந்து பி.வாசு இயக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தில் நடித்து வருகிறார் கங்கனா ரனாவத். இந்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
தமிழில் 2005-ம் ஆண்டு வெளியாகி 17 ஆண்டுகள் கழித்து, இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் பி.வாசு. பிரமாண்டமான பொருட்செலவில் தயாராகி வரும் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், வடிவேலு, லட்சுமி மேனன், ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஆஸ்கர் விருது வென்ற எம்.எம். கீரவாணி இசையமைத்துள்ளார். இந்நிலையில் கங்கனா ரனாவத் தனது கதாபாத்திரத்துக்கான அனைத்து படப்பிடிப்புகளையும் நேற்றுடன் முடித்துவிட்டார். அதுகுறித்து உருக்கமாக சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், “இந்த படப்பிடிப்பில் இருந்து விடைபெறுவது கடினமாக உள்ளது. ராககவா லாரன்ஸ் ஒரு அற்புதமான மனிதர். இந்த படம் மூலம் அவருடைய நட்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. விரைவில் சந்திரமுகி 2 படத்தில் இருந்து விடைபெறவுள்ளேன் என்று பதிவிட்டுள்ளார்.
 - cini express.jpg)