நான் எப்பவும் இந்த கடையில் தான் இருப்பேன்..! புது பிசினஸ் ஆரம்பித்த வனிதா விஜயகுமார்!

 
1

தமிழ் திரையுலகில் விஜயகுமார் - மஞ்சுளா சினிமா தம்பதிகளின் மகளான வனிதா விஜயகுமார், நடிகர் விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தில் சினிமாவில் அறிமுமானார். அதற்கு பிறகு, அவருக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்த நிலையில், திருமணம் செய்துகொண்டார். ஆனால், அவருடைய திருமண வாழ்க்கை கருத்து வேறுபாடுகளால் 2 முறையும் முறிவுக்கு வந்தது.

Vanitha-new-shop

இந்த நிலையில்தான், வனிதா பிக்பாஸ் சீசன் 3-ல் பங்கேற்று தனது வெளிப்படையான தைரியமான கேரக்டரால் அனைவரின் கவனத்தையும் திருப்பி தன்னைப்பற்றி பேச வைத்தார். அப்போது சமூக வலைதளத்தில் ட்ரெண்டிங் ஆன அவர் தொடர்ந்து சீரான இடைவெளியில் சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் இன்னும் ட்ரெண்டிங்கில்தான் இருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, சர்ச்சைகளில் சிக்கினாலும் விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் சீரியல்களிலும் தனது வெற்றி முத்திரையை பதித்தார். அவருக்கு சினிமா வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. பணமும் குவிந்து வருகிறது.

Vanitha-shop

இந்த சூழ்நிலையில்தான், நடிகை வனிதா விஜயகுமார், புது பிஸினஸ் தொடங்கி இருக்கிறார். ஆடை அலங்காரம் மற்றும் மேக்கப்புகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட வனிதா, சென்னையில் வனிதா விஜயகுமார், பேஷன் மற்றும் காஸ்டியூம் கடை ஒன்றை ஆரம்பித்து உள்ளார். அதில் ஆடை மற்றும் மேக் கப் போன்ற விஷயங்களை மக்களுக்கு கொண்டு செல்ல இருப்பதாக வனிதா தெரிவித்துள்ளார்.

Vanitha-shop

வனிதா விஜயகுமார் தொடங்கியுள்ள கடைக்கு செல்லும் பலரும் ஆடைகள் மற்றும் மேக்கப் பொருட்களை வாங்குவதோடு அவருடன் புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் செல்கின்றனர். இதனால், வனிதா விஜயகுமார் தொடங்கியுள்ள புதிய பிஸினஸ் பற்றி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

From Around the web