புனித் ராஜ்குமார் செய்துவந்த உதவிகளை நான் தொடர்வேன்: விஷால்..!

 
விஷால்

மறைந்த புனித் ராஜ்குமார் 1800 மாணவ, மாணவிகளுக்கு செய்து வந்த கல்விச் சேவையை நான் தொடருவேன் என்று நடிகர் விஷால் பேசியுள்ளார்.

தீபாவளிக்கு வெளியாகும் ‘எனிமி’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு ஐதராபாத்தில் நடந்தது. அப்போது பேசிய விஷால் மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் என்னுடைய நல்ல நண்பர். அவருடைய இழப்பு எனக்கு வேதனையாக உள்ளது.

பல சமூக சேவைகளை அவர் செய்து வந்தார். அதில் 1800 மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக கல்வி பயிலும் வாய்ப்பை அளித்தார். அந்த பொறுப்பை அடுத்தாண்டு முதல் நான் ஏற்றுக்கொண்டுள்ளேன் என்று கூறினார்.

முன்னதாக நடிகர் விஷால் தனது தாயார் தேவி பெயரில் அறக்கட்டளை மூலம் சமூக சேவைகளை அவர் செய்து வருகிறார். தற்போது புனித் ராஜ்குமார் செய்து வந்த சேவைகளை விஷால் தொடருவது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

From Around the web