சிம்புக்கு எப்போது திருமணம் ஆகிறதோ அதன் பின்னர் தான் திருமணம் செய்து கொள்வேன் - பாக்கியலட்சுமி நடிகை..! 

 
1

நடிகர் சிம்புவுக்கு 41 வயதாகியும் இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதும் இப்போதைக்கு அவருக்கு திருமணம் நடக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது என்பதும் தெரிந்தது. சிம்புவின் பெற்றோர் அவருக்கு கடந்த சில ஆண்டுகளாக பெண் பார்த்து வரும் நிலையில் எந்த பெண்ணும் சிம்புவுக்கு செட் ஆகவில்லை என்றும் சிம்புவுக்கு பொருத்தமான பெண்ணை தேடிக் கொண்டிருக்கிறோம் என்றும் டி ராஜேந்தர் - உஷா தம்பதி பலமுறை பேட்டி அளித்துள்ளனர்.

இந்த நிலையில் சிம்புவின் தீவிர ரசிகைகளில் ஒருவரான விஜய் டிவி சீரியல் நடிகை ரேமா அசோக் என்பவர் சிம்புக்கு எப்போது திருமணம் ஆகிறதோ, அதன் பின்னர் தான் நான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவருடைய இந்த கருத்துக்கு ’இப்படி ஒரு முடிவை நீங்கள் எடுத்தால் கடைசி வரை உங்களுக்கு திருமணம் நடக்காது’ என்று காமெடியாக கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.

சமூகவலைதளத்தில் பிரபலமாகி நடிகையானவர்களில் ரேமா அசோக்கும் ஒருவர். ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் வில்லியாக மிரட்டியவர். இவர் தமிழ் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறையில் பணிபுரிகிறார்.அவர் நடனக் கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், மேலும் கலைஞர் டிவி மற்றும் விஜய் டிவியில் சில நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’கல்யாணம் முதல் காதல் வரை’ ’நாச்சியார்புரம்’ ’சின்னத்தம்பி’ உள்பட சில சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1

From Around the web