என் மகளுக்கு கல்யாணம்னா நானே சொல்றேன், இப்படி பண்ணாதீங்க ப்ளீஸ்... 

 
1

தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் டாப் நடிகையாக உருவெடுத்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.கீர்த்தி சுரேஷ் தற்போது மெகாஸ்டார் சிரஞ்சீவி  படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவர் தங்கையாக நடிக்கவுள்ளார்.

மேலும் இவர் தமிழில் ஜெயம் ரவியுடன் ஒரு பான் இந்தியா திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

நடிகை என்றாலே காதல், கல்யாணம் உள்ளிட்ட கிசுகிசுக்களுக்கு ஆளாகாமல் இருக்க முடியுமா என்ன? கீர்த்தி சுரேஷும் அதற்கு விதிவிலக்கல்ல.இந்நிலையில், கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்து சில நாட்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இவருக்கும் துபாயைச் சேர்ந்த தொழிலதிர் ஃபர்ஹான் என்பவருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக பல செய்திகள் பரவின.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ் வீடியோ வெளியிட்டு இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ளார்.“இதுபோன்ற பொய்யான செய்திகளை ஒளிபரப்புவதற்கு முன்பு குறுக்கு சோதனை செய்யுங்கள். கீர்த்தி சுரேஷ் யாரையும் காதலிக்கவில்லை. அவரது பிறந்தநாளில் அவரது நண்பர் ஃபர்ஹானுடன் எடுத்த புகைப்படங்களை வைத்து இப்படி செய்திகள் வெளியிட்டுள்ளனர். பர்ஹான் எங்கள் குடும்ப நண்பர். கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் ஆகப்போகிறது என்றால் அதை உங்களுக்கு சொல்லும் முதல் ஆளாக நானாகத் தான் இருப்பேன். எனவே இது மாதிரியான போலி செய்திகளை பரப்பாதீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

From Around the web