இனி குக் வித் கோமாளியில் நான் இருக்க மாட்டேன் : வெங்கடேஷ் பட்..! 

 
1

குக் வித் கோமாளி இதுவரை நான்கு சீசன்கள் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்து இருக்கிறது. கூடிய விரைவில் ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக வெங்கடேஷ் மேலும், மற்றும் தாமு இருக்கிறார்கள். நான்கு சீசன்களிலும் இவர்கள் தான் நடுவர்களாக இருந்தார்கள். இவர்கள் இருவருமே ஏற்கனவே பல டிவி நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கின்றனர். இவர்கள் இருவமே கோமாளிகளை ஒரு வழி செய்து விடுவார்கள்.

மேலும், இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் படு பேமஸ் ஆனவர் வெங்கடேஷ் பட். இவர் இந்தியா முழுக்க இருக்கும் பல்வேறு இவர் சிறப்பு செஃப்பாக இருக்கிறார். இவர் அசைவம் சாப்பிடுவது இல்லை என்றாலும் வெறும் வாசனையை வைத்தே அதில் இருக்கும் உப்பு முதல் கொண்டு சொல்லிவிடுவார். அந்த அளவிற்கு மிகவும் திறமையான ஒரு செஃப்பாக தான் இவரை சொல்ல வேண்டும்.

இந்நிலையில்,  ‘குக் வித் கோமாளி’ தொடரின் 5-வது சீசனில் தான் பங்கேற்வில்லை என  செஃப் வெங்கடேஷ் பட் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், குக் வித் கோமாளியின்புதிய சீசனில் நான் பங்கேற்கவில்லை என்பதை தெளிவுப்படுத்தும் வாய்ப்பாக இதனை பயன்படுத்திக்கொள்கிறேன்.

என்னையும் சேர்த்து பல லட்சம் பேரை மகிழ்விக்கும் அந்த அற்புதமான நிகழ்ச்சியிலிருந்து ப்ரேக் எடுத்துக்கொள்கிறேன். குக் வித் கோமாளி என்னுடைய ஜாலியான பக்கத்தைக் காட்டியது. மேலும் நான் நானாக இருக்க வசதியை ஏற்படுத்தி தந்தது. 24 ஆண்டுகளுக்கும் மேலாக நான் அங்கம் வகித்த சேனலுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு, மற்ற வாய்ப்புகளை நோக்கிச் செல்ல முடிவு செய்துள்ளேன். நிகழ்ச்சியின் இயக்குநர் உள்ளிட்டோருக்கு நன்றி.

மன அழுத்தத்தில் இருக்கும் பலருக்கும் அவர்களின் மன அழுத்ததை குறைக்கும் நிகழ்ச்சியாக இது அமைந்தது. இந்த முடிவு ஒரு கடிமான முடிவாக இருந்தாலும், அதில் நான் உறுதியாக இருக்கிறேன். விரைவில் வரவிருக்கும் வித்தியாசமான நிகழ்ச்சியில் உங்கள் அனைவரையும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். என பதிவிட்டுள்ளார்.

From Around the web