பா.ரஞ்சித் மீதான வழக்கை ரத்து செய்தது ஐகோர்ட் கிளை..!

 
1
நீலப்புலிகள் அமைப்பின் சாா்பில் கடந்த 2019ம் ஆண்டு ஜூன் 5ம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், பேரரசர் ராஜராஜ சோழனின் வரலாறு குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்த கருத்து பலத்த சர்ச்சையைக் கிளப்பியது.

அதனைத் தொடர்ந்து, ராஜராஜ சோழன் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாகக் கூறி பா.ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய புகாரின் கீழ் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி பா.ரஞ்சித் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இது தொடர்பான விசாரணை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, பா.ரஞ்சித் மீதான வழக்கு விசாரணையின் இறுதி அறிக்கையை, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இருதரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், பா.ரஞ்சித் மீதான வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

From Around the web