மாஸ்டர் பட தயாரிப்பாளரும், விஜயின் மாமாவுமான சேவியர் பிரிட்டோ வீட்டில் ஐடி ரெய்டு!

 
1

தமிழ்நாட்டில் நேற்று காலையில் இருந்து ஷியோமி நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. சீன நிறுவனமான ஷியோமி நிறுவனத்தின் போன் விற்பனை தொடர்பாகவும், அவர்களின் வருமான வரி கணக்கு தொடர்பாகவும் சோதனை செய்யும் வகையில் இந்த ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.சென்னையில் மட்டும் 25 இடங்களில் இதற்காக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

இந்நிலையில் பெங்களூர், ஐதராபாத் உள்ளிட்ட வேறு சில நகரங்களிலும் சீன நிறுவனமான ஷியோமிக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. இதில் ஷியோமி ஏற்றுமதி இறக்குமதி செய்யும் நிறுவனங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. ஷியோமி சார்பாக யாரெல்லாம் இந்தியாவில் ஏற்றுமதி, இறக்குமதி செய்கிறார்கள் என்று லிஸ்ட் எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் மாஸ்டர் பட தயாரிப்பாளரும் நடிகர் விஜய் உறவினருமான சேவியர் பிரிட்டோ இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.  செல்போன் நிறுவனத்தின் ஏற்றுமதி, இறக்குமதியை சேவியர் பிரிட்டோவின் நிறுவனம் கையாளுவதால் சோதனை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாஸ்டர் பட தயாரிப்பாளரும் நடிகர் விஜய் உறவினருமான சேவியர் பிரிட்டோ இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From Around the web