விடுதலை ஓ.டி.டி ரிலீஸ்- ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்பரைஸ்..!!
விடுதலை திரைப்படம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ள நிலையில் அதுதொடர்பான முக்கியமான அப்டேட்டை படக்குழு சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளது.
Apr 28, 2023, 19:05 IST

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை பாகம் 1 திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பல்வேறு திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் விடுதலை படக்குழுவுக்கு வாழ்த்துகளை கூறினர்.
இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள சூரி, நடிப்பில் புதிய பரிணாமத்தை காண்பித்தார். அதேபோல விஜய் சேதுபதியின் கதாபாத்திர வடிவமைப்பும் ரசிகர்களை கவர்ந்தது. விடுதலை படத்துக்காக இளையராஜா இசையமைத்த பாடல்கள் ரசிகர்களை முணுமுணுக்க வைத்தது.
விடுதலை திரைப்படம் ஓ.டி.டி-யில் இன்று 12 மணிக்கு வெளியாகியுள்ளது. அதில் திரையரங்குகளில் இல்லாத சில காட்சிகளுடன் விடுதலை படத்தின் ஓ.டி.டி வெளியீடு அமைந்துள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் கவனமீர்த்துள்ளது.