ஒரு ஆண் இப்படி செய்து இருந்தா சும்மா விட்டு இருப்பிங்களா? குவியும் கண்டனங்கள்..!
இறுதியாக நடைபெற்ற எபிசோட்டில் கோமாளிகள் எல்லாரும் காமெடி நடிகர்களின் கெட்டப் போட்டு வந்தார்கள். அதில் கேபிஓய் சரத் கோவில் திரைப்படத்தில் வடிவேலு போட்ட கெட்டப்புடன் வந்திருந்தார்.
இந்த நிலையில், ஷாலினி ஜோயா பொருட்கள் எடுக்கும் அறையில் தரையில் அமர்ந்திருந்த போது, அவருடன் மணிமேகலையும் கேபிஓய் சரத்தும் பேசிக்கொண்டிருக்க திடீரென சரத்தின் டிரஸ்ஸை தூக்கிப் பார்த்து விடுகிறார் ஷாலினி. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதோடு, இதற்கு கண்டனங்களும் குவிந்து வருகின்றன.
இதை பார்த்த மாதம்பட்டி ரங்கராஜ் கூட இதை கட் பண்ணி விடுமாறும் செய்கை காட்டியுள்ளார். இது இறுதியாக நடைபெற்ற எபிசோட்டில் டெலிகாஸ்ட் ஆகி இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
இந்த வீடியோவை பார்த்த சிலர் ஒரு ஆண் இப்படி செய்து இருந்தா சும்மா விட்டு இருப்பிங்களா? ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் இப்படி ஆண் மீது அத்துமீறி நடந்து கொள்ளலாமா? என்று கேட்டு கொந்தளித்து வருகிறார்கள்.
மேலும் ஒரு பெண் இப்படி நடந்துள்ளார். அப்படி என்றால் ஆண்களுக்கு மானம் இல்லையா? சேனல் தரப்பில் கூட இதை இப்படியே டெலிகாஸ்ட் பண்ணி இருக்கின்றார்கள். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கின்றார்கள்.
இப்படி பசங்களோட டிரெஸ்ஸ தூக்கி பார்த்து தான் இந்த நிகழ்ச்சிக்கு கண்டெண்ட் கொடுக்கணுமா? என பல விதமாக விமர்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.