இவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தால்... செம போட்டி இருக்கும்ல..!
Sep 21, 2023, 07:05 IST

ஆபீஸ் சீரியல் மூலம் பிரபலமானவர் தான் சின்னத்திரை நடிகர் விஷ்ணு. இவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் உள்ளனர்.ஜீ தமிழில் வெளியான சத்யா சீரியலில் ஆயிஷாவுடன் விஷ்ணு இணைந்து நடித்த நிலையில் இருவரும் காதலித்து வந்ததாக கிசுகிசுக்கப்பட்டது அதனை போல நிறைய புகைப்படங்கள் உள்ளது…அதன் பின்னர் இருவருக்கும் இடையே பிரேக்கப் ஆகிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின
கடந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட ரச்சிதாவுடன் சமீபகாலமாக நெருக்கம் காட்டி வரும் விஷ்ணுவுக்கு ரச்சிதாவின் சிபாரிசு மூலமே இந்த முறை பிக்பாஸ் வர அதிக வாய்ப்பு என்றும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இந்த முறை ரச்சிதாவின் கணவர் தினேஷ் மற்றும் விஷ்ணு இருவரும் ஒரே சமயத்தில் உள்ளே நுழைந்தால் செம போட்டி இருக்கும் என்றும் அதன் காரணமாகவே கூட இவரை போட்டியாளராக தேர்வு செய்திருக்கலாம் என்கின்றனர்.