அவர் என்னை காப்பாற்றலனா என்னுடைய விலா எலும்பு நொறுங்கி இருக்கும் - ராம்கி குறித்து மனம் திறந்த நிரோஷா..!

 
1

மறைந்த பழம்பெரும் நடிகர் எம்.ஆர். ராதாவின் இளைய மகள் தான் நிரோஷா என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். 52 வயதாகும் நிரோஷா பல ஆண்டுகளாக ரஜினிகாந்த் உடன் நடிக்க முடியாமல் இருந்து வந்த நிலையில், தற்போது லால் சலாம் படத்தின் மூலம் சூப்பர் ஸ்டார் உடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

அக்னி நட்சத்திரம் படத்தில் நடிக்க புதுமுக நடிகையை தேடிக் கொண்டிருந்த மணிரத்னம் நடிகை ராதிகாவின் தங்கை நிரோஷாவை அந்த படத்தின் மூலம் அறிமுகம் செய்தார். தொடர்ந்து கமல்ஹாசனின் சூரசம்ஹாரம், செந்தூரப்பூவே, பாண்டி நாட்டு தங்கம், மருது பாண்டி, பச்சைக்கொடி உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்து வந்தார் நிரோஷா.1988ம் ஆண்டு வெளியான செந்தூரப்பூவே படத்தில் ராம்கியுடன் இணைந்து நடித்த நிரோஷா தொடர்ந்து பறவைகள் பலவிதம், இணைந்த கைகள் உள்ளிட்ட சில படங்களில் இணைந்து நடித்தார். இணைந்த கைகள் படத்தில் ராம்கிக்கு ஜோடியாக அல்லாமல் அருண் பாண்டியன் படத்துக்கு நிரோஷா ஜோடியாக நடித்தார். ஆனால், தொடர்ந்து இருவரும் காதலித்து வந்த நிலையில், 1995ம் ஆண்டு ராம்கியை திருமணம் செய்துக் கொண்டார் நிரோஷா.

நடிகை நிரோஷா தனக்கும் தன்னுடைய கணவர் ராம்கிக்கும் இடையிலான காதல் கதை குறித்து பகிர்ந்து இருக்கிறார்‌ அதில் என்னுடைய கணவருக்கு நான் இதுவரைக்கும் ஐ லவ் யூ சொன்னதே கிடையாது. தொடக்க காலத்தில் நடிக்கும்போது சண்டை மட்டும்தான் எங்களுக்குள் இருந்தது. நாங்கள் எப்போதும் இருவரும் சண்டையிட்டுக் கொண்டு இருப்போம். நடிக்கும் போது அவர் என்னை தொட்டு நடிக்கும் போதெல்லாம் நான் அவரிடம் நீங்க நடிக்கும் போது என்னை தொடுறதுக்கு என்கிட்ட அனுமதி கேட்க மாட்டீங்களா? கமல் சார் கூட நடிச்சிருக்கிறேன்.

ஆனால் அவர் கூட என்னை தொடுவதற்கு முன்பு என்னிடம் அனுமதி கேட்பார் ஆனால் நீங்கள் யாருங்க என்று நான் அவரிடம் திமிராக பேசியிருக்கிறேன். அதற்கு ராம்கி, உன் படம் வரப்போகுது நாங்க தியேட்டர்ல போய் கத்துவோம். அந்த படம் ஊத்திக்க போகுது என்று சார்லியும் ராம்கியும் கிண்டல் பண்ணுவாங்க. அப்போதெல்லாம் ராம்கி எனக்கு கொஞ்சம் கூட பிடிக்காது. பிறகு ஒரு முறை செந்தூரப்பூவே திரைப்படத்திற்காக சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஒரு நீர்வீழ்ச்சியில் நான் மூழ்கி விட்டேன்.

அது எனக்கு மிகப்பெரிய விபத்து. அதில் நான் பிழைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. நான் செத்துதான் பிழைத்தேன். அந்த விபத்து நடந்து ஒரு சில நாட்களில் அடுத்ததாக எனக்கு ஒரு ரயில் விபத்தும் ஏற்பட்டது. அந்த விபத்தில் என்னை ராம்கி தான் காப்பாற்றினார். அவர் மட்டும் அப்போ காப்பாற்றலனா என்னுடைய விலா எலும்பெல்லாம் நொறுங்கிப் போய் இருக்கும். எனக்கு அடிபட்டதும் எல்லோரும் என்னை ஹாஸ்பிடலுக்கு தூக்கி கொண்டு போய்க் கொண்டிருக்கும் போது கூட ராம்கி "கவலைப்படாத நான் இருக்கேன்னு" சொன்னார்.

அந்த நேரத்தில் நாங்கள் இருவரும் வெற்றி படங்களை ஜோடியாக கொடுத்துக் கொண்டிருந்ததால் மக்கள் மத்தியில் பிரபலங்களாக இருந்தோம். அந்த நேரத்தில் தான் இணைந்த கைகள் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த படத்தில் நான் தான் ராம்கிக்கு ஜோடி. ஆனால் படத்தின் பூஜை முடிந்ததும் அங்கே எங்க அக்கா ராதிகா வந்து நான் இந்த படத்தில் நடிக்க கூடாதுன்னு பிரச்சனை பண்ணிட்டாங்க. அதனால்தான் அருண் பாண்டியனுக்கு ஜோடியாக என்னை மாத்திட்டாங்க என்று அந்த பேட்டியில் நடிகை நிரோஷா பேசியிருக்கிறார்.

From Around the web