யோக்கியன் என்றால் அது அவர் தான்.. விசித்ரா சொன்ன நடிகர் யாரு தெரியுமா?

 
1
ஹேமா கமிட்டி அறிக்கையால் மலையாள சினிமா நடுங்கி போய் உள்ளது. பல பிரபலங்களும் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்து போய் உள்ளனர்.

மலையாள நடிகர் சங்க நிர்வாகிகளே கூண்டோடு ராஜினாமா செய்தனர். இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. ஒரு சிலர் இதெல்லாம் சகஜம் என்று சொன்னாலும் ஹேமா கமிட்டி அறிக்கையால் ஒன்றுமே செய்ய முடியாது என்று இன்னும் சிலர் விவாதம் செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவிலும் ராதிகா, ஊர்வசி பகிர்ந்து வந்த நிலையில், தமிழில் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள் இது பற்றி வாய் திறக்காமல் இருப்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதை தொடர்ந்து பல நடிகைகளும் தமக்கு ஏற்பட்ட துன்புறுத்துகள் குறித்தும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றியும் மனம் திறந்து உள்ளனர். இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பிரபல நடிகர்களும் இதில் உள்ளாகி வருகின்றார்கள்.

அந்த வகையில் எங்கு பார்த்தாலும் அட்ஜஸ்மென்ட் பற்றிய பேச்சுகள் தான் காணப்படுகின்றது. ஒரு காலத்தில் 'மடிப்பு அம்சா' என்று அழைக்கப்படும் நடிகை விசித்ரா தன் பங்கிற்கு தற்போது கருத்து ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதாவது எனக்குத் தெரிஞ்சு 100% ஜென்டில்மேன் என்றால் அது டி.ராஜேந்திரன் சார் மட்டும்தான். அந்த விஷயம் சினிமால இருக்கிற எல்லாருக்குமே தெரியும். இதை சொல்லுவதால் யாரும் என்ன திட்ட கூட மாட்டார்கள். மதிப்பு, மரியாதை போன்ற விஷயங்கள் எல்லாமே யோக்கியன் என்று சொன்னால் அது டி. ராஜேந்திரன் சாரை மட்டும்தான் சொல்லலாம் என்று விசித்திரா தற்போது பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

From Around the web