’நான் ஓரினச்சேர்க்கையாளராக இருந்தால் கண்டிப்பாக அதை நான் பெருமையுடன் சொல்வேன் - கார்த்திக்..!
சமீபத்தில் பாடகி சுசித்ரா அளித்த பேட்டியில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா குறித்தும் தனது முன்னாள் கணவர் குறிக்கும் சர்ச்சைக்குரிய சில கருத்துக்களை தெரிவித்தார். தனுஷும் தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமாரும் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்று அவர் கூறியது தான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இது குறித்து கார்த்திக் குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அதில் ’நான் ஓரினச்சேர்க்கையாளராக இருந்தால் கண்டிப்பாக அதை நான் பெருமையுடன் சொல்வேன் என்றும், மறுக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்றும் அதை சொல்ல எனக்கு எந்த விதமான தயக்கமும் இல்லை என்றும் கூறினார்.
மேலும் நான் ஓரினச்சேர்க்கையாளர் இல்லை என்றும் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஆதரவளிப்பதால் அவர்களுடைய நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் நானும் ஓரினச்சேர்க்கையாளர் என்று அர்த்தம் கிடையாது என்றும் ஒருவேளை நான் ஓரினச்சேர்க்கையாளர்கள் இருந்தால் அதை பகிரங்கமாக ஒப்புக் கொள்வேன் என்றும் தெரிவித்தார். அவரது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.