உலகக்கோப்பை போட்டியில் இந்தியா வென்றால் நிர்வாணமாக ஓடுவேன்..! பிரபல தெலுங்கு நடிகை அறிவிப்பு..!
உலகக் கோப்பை-2023 இல் இந்தியாவின் பயணம் போட்டி தொடங்கியதில் இருந்து தோல்வியின்றி வெற்றி நடை போட்டு செல்கிறது.
நேற்று மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரை இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை 70 ரன்களில் இந்தியா வென்றது.
இம்முறை உலகக் கோப்பையை இந்தியா வெல்லும் என்று தெரிகிறது. இதற்கு முக்கிய காரணம் டீமில் உள்ள அனைவரும் நல்ல பார்மில் இருப்பதுதான்..
இந்நிலையில் தெலுங்கு நடிகை ரேகாபோஜ் தனது சமூக வலைதளத்தில் பரபரப்பு அறிக்கையை தெரிவித்துள்ளார். 'இந்தியா உலகக் கோப்பையை வென்றால்... விசாகப்பட்டினம் கடற்கரையில் ஸ்ட்ரீக்கிங் செய்வேன் என்று ஒரு பதிவை போட்டுள்ளார்.
ஸ்ட்ரீக்கிங் என்றால் என்ன?
கால்பந்து, பேட்மிண்டன், குத்துச்சண்டை போன்ற விளையாட்டுகளில் சிலர் தங்கள் அணி வெற்றி பெற்றால் மகிழ்ச்சியில் நிர்வாணமாக ஓடுகிறார்கள். ஆடை இல்லாமல் ஓடுவது ஸ்ட்ரீக்கிங் எனப்படும். இந்த கலாச்சாரம் பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளில் காணப்படுகிறது. தங்களுக்குப் பிடித்த அணி வெற்றி பெற்றால், மகிழ்ச்சியில் இப்படிச் செய்கிறார்கள். இப்போது ரேகா போஜும் அப்படித்தான் செய்யப் போகிறார்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், துணிகளைக் களைந்துவிட்டு விசாகப்பட்டினம் கடற்கரையில் ஓடுவேன் என்று துணிச்சலான அறிக்கையை வெளியிட்டார்.