பத்திரிகையாளர்களுக்கு கொஞ்சமாவது மனிதாபிமானம் இருந்தால் இனி இது போல் செய்திகளை பரப்ப மாட்டார்கள் என்று நம்புகிறேன்..!

 
1

 சவுக்கு சங்கர் தனது யூடியூப் தளத்தில் நடிகை நிவேதா பெத்துராஜுக்கு தமிழகத்தை சேர்ந்த அரசியல்வாதி ஒருவர் 50 கோடி மதிப்பில் துபாயில் வீடு வாங்கி கொடுத்ததாக தெரிவித்துள்ள நிலையில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் இது குறித்து நடிகை நிவேதா பெத்துராஜ் தனது சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:  அரசியல்வாதி ஒருவர் எனக்கு பணம் செலவு செய்து துபாயில் வீடு வாங்கி கொடுத்ததாக பேசி இருப்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுக்கும் முன் மனிதநேயத்துடன் இந்த தகவல் சரியா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.

இந்த விவகாரத்தால் நானும் என் குடும்பமும் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறோம். இதுபோன்ற தவறான செய்திகளை பரப்ப வேண்டாம். நானும் ஒரு கண்ணியமான குடும்பத்தில் இருந்து தான் வந்திருக்கிறேன். 20 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் துபாயில் இருக்கிறோம். இப்போது கூட நாங்கள் வாடகை வீட்டில் தான் இருக்கிறோம். 16 வயதில் இருந்தே நான் நடித்து சம்பாதித்து வருகிறேன்.

இதுவரை 20 படங்களுக்கு மேல் சினிமாவில் நடித்து விட்டேன். நானாக போய் எந்த ஒரு வாய்ப்பையும் கேட்டதில்லை. எல்லா வாய்ப்புகளும் எனக்கு தானாகவே வந்தது. எனக்கு எப்போதுமே பணத்தின் மீது பேராசை இருந்ததே இல்லை. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் துபாயில் தான் இருக்கிறோம்.

சென்னையில் கார் ரேஸ் நடத்தப்படுவது குறித்து எனக்கு எதுவுமே தெரியாது. நாங்கள் அமைதியான எளிமையான ஒரு குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம். இப்போதுதான் பல போராட்டங்களை சந்தித்து நாங்கள் நல்ல நிலையில் இருக்கும்போது இதுபோன்ற வதந்திகள் எங்கள் மனதை காயப்படுத்தி உள்ளன. இந்த விவகாரத்தை நான் சட்ட ரீதியாக எதிர்கொள்ளவில்லை. ஆனால் அதே நேரத்தில் பத்திரிகையாளர்கள் கொஞ்சமாவது மனிதாபிமானம் இருந்தால் இது போன்ற அவதூறு செய்திகளை இனி பரப்ப மாட்டார்கள் என்று நம்புகிறேன்’ என்று கூறியுள்ளார்.


 


 

From Around the web