குஷ்பூ என் வாழ்க்கையில் வரவில்லைனா இந்த நடிகைக்கு தான் ப்ரொபோஸ் செய்திருப்பேன்..!!
 

 
1

தமிழில் 20க்கும் அதிகமான திரைப்படங்களை இயக்கியிருப்பவர் சுந்தர் சி. முறைமாமன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . உள்ளத்தை அள்ளித்தா அருணாச்சலம் மற்றும் அன்பே சிவம் ஆகியவை இவரது இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படங்கள் ஆகும் . இவை தவிர மேட்டுக்குடி வின்னர், கலகலப்பு, லண்டன் உள்ளிட்ட திரைப்படங்கள் இவரது இயக்கத்தில் உருவான நகைச்சுவை திரைப்படங்களாகும் . .

இயக்குனராக பணியாற்றி வந்த இவர் தலைநகரம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் . அதனைத் தொடர்ந்து கதாநாயகனாக சில வருடங்கள் நடித்த இவர் அவ்வப்போது திரைப்படங்களை இயக்கிக் கொண்டிருந்தார் . அதன் பிறகு அரண்மனை திரைப்படத்தின் மூலம் மீண்டும் இயக்குனரானார். இவர் நடிகை குஷ்புவை 2000 ஆண்டில் திருமணம் செய்து கொண்டார் . இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் . சுந்தர் சி யும் குஷ்பூவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் .

1

தற்போது குஷ்பூ தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு வரும் வேளையில் சுந்தர் சி தனது குடும்பத்தை கவனித்துக் கொண்டு அரண்மனை நாலு திரைப்படத்தை இயக்க இருக்கிறார் . இந்நிலையில் தனது திருமணம் பற்றி மனம் திறந்து இருக்கிறார் சுந்தர் சி இதுகுறித்து தொலைக்காட்சி ஒன்றியத்தை அளித்த பேட்டியில் பேசிய சுந்தர் சி தான் குஷ்பூ சந்திக்கவில்லை என்றால் எந்த நடிகையை மனம் செய்திருப்பேன் எனவும் தெரிவித்திருக்கிறார் . குஷ்பூ என் வாழ்க்கையில் வரவில்லை என்றால் தான் இந்த நடிகைக்கு தான் ப்ரொபோஸ் செய்திருப்பேன் என்றும் சுந்தர் சி கூறியிருப்பது அவருக்கு அந்த நடிகையை எவ்வளவு பிடிக்கிறது என்பதை காட்டுகிறது

இது குறித்து மனம் திறந்துள்ள சுந்தர் சி குஷ்பூ என் வாழ்க்கையில் வரவில்லை என்றால் நான் மறைந்த நடிகை சௌந்தர்யாவிற்கு தான் ப்ரொபோஸ் செய்திருப்பேன் என தெரிவித்திருக்கிறார் . தனக்கு மிகவும் பிடித்தமான நடிகைகளில் அவரும் ஒருவர் எனக் கூறிய சுந்தர் சி குஷ்பு வாழ்க்கையில் வராமல் இருந்திருந்தால் சௌந்தர்யாவிற்கு ப்ரொபோஸ் செய்திருப்பேன் என தெரிவித்திருக்கிறார்

From Around the web