சூர்யாவை உதைத்தால் ரூ. 1 லட்சம்..!!

 
1
சூர்யா தயாரிப்பில் வெளிவந்த படம் ஜெய் பீம் . இந்த படத்திற்கு பல்வேறு இடங்களில் எதிர்ப்புகள் பரவி வருகின்றன.

அந்த வகையில் மயிலாடுதுறையில் உள்ள பாமக குழுவினர் தயாரிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.மேலும்அங்கு உள்ள திரையரங்கு ஒன்றில் சூர்யாவின் வேல் படம் ஓடிக்கொண்டிருந்தது. இந்த திரைப்படம் உடனடியாக நிறுத்தப்பட்டு மக்கள் திரையரங்கை விட்டு வெளியேற்றப்பட்டனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜெய்பீம் திரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் தவறாக சித்தரிக்கப் பட்டுள்ளதாக அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை தீவிரப்படுத்தும் வகையில் மயிலாடுதுறைக்கு சூர்யா வந்தால் எட்டி உதைக்கும் நபருக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசு பாமக சார்பில் வழங்கப்படும் எனவும் அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. . இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

From Around the web