என்னிடம் தவறாக நடந்து டைரக்டர் என் முன்பு வந்தால்... நடிகை அஸ்வினி ஓபன்..!

 
1

சினிமா துறையிலும் அட்ஜஸ்மென்ட் பிரச்சனை, பாலியல் தொல்லை தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கிறது. இது குறித்து நடிகை அஸ்வினி சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார்.அதில் நான் புது நெல்லு புது நாத்து திரைப்படத்தின் மூலமாகத்தான் தமிழில் பிரபலமானேன். அதற்குப் பிறகு கிழக்கு சீமையிலே போன்ற ஹிட்டான திரைப்படங்களும் எனக்கு கிடைத்தது. அந்த நேரத்தில் எனக்கு சில கசப்பான சம்பவங்களும் நடைபெற்றது. சூட்டிங்கிற்கு எப்போதும் என்னுடைய அம்மாவோடு தான் வருவேன்.

ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு நாள் அம்மாவால் ஷூட்டிங்கிற்கு வர முடியாமல் இருந்தது. அதனால் நான் என்னுடைய மேக்கப் ஆர்டிஸ்ட் உடன் வந்து இருந்தேன். அப்போது நான் தனியாக இருக்கும்போது அந்த திரைப்படத்தின் டைரக்டர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார். எனக்கு அதை வெளியே சொல்லுவதற்கே பயமாக இருந்தது. நானும் டீன் ஏஜ் பருவத்தில் இருந்ததால் இதில் எது தவறு எது சரி என்று எனக்கு யோசிக்க முடியவில்லை.

அந்த இடத்தில் என்ன நடந்தது என்பது மட்டும்தான் என்னுடைய மண்டையில் ஓடிக்கொண்டு இருந்தது. ஒருவேளை நான் செய்ததுதான் தவறா? நான் இங்கே தனியா வந்திருக்கக் கூடாதா? இந்த டைரக்டர் என்னிடம் தப்பாக நடந்து கொள்ளும்போது நாம் அதற்கு எப்படி மறுப்பு சொல்லி இருக்க வேண்டும்? என்றெல்லாம் யோசித்து யோசித்து எனக்கு ரொம்பவும் மனக்கஷ்டமாகிவிட்டது.

இதைப்பற்றி என்னுடைய அம்மாவிடம் கூட நான் சொல்லவில்லை. நான் தூக்க மாத்திரைகளை நிறைய சாப்பிட்டு தற்கொலை முயற்சி எடுத்தேன். அதற்கு பிறகு தான் என்னுடைய அம்மா என்ன நடந்தது என்று விசாரித்தார். அப்போது நடந்த விஷயத்தை சொன்னேன். அதில் உன்னுடைய தவறு எதுவும் இல்லை என்று என்னுடைய அம்மா எனக்கு புரிய வைத்தார். அதற்குப் பிறகு நான் சினிமாவில் நடிப்பதை குறைத்து இருந்தேன்.இப்போது மீண்டும் சுழல் வெப் சீரிஸ் மூலமாக நான் நடிக்க வந்திருக்கிறேன். இதற்கு குடும்பத்தினர் எல்லோரிடமும் பேசி நடிக்க வந்திருக்கிறேன். இந்த திரைப்படத்திற்குப் பிறகு எனக்கு சரியான வாய்ப்புகள் வந்தால் தொடர்ந்து நடிப்பேன் இல்லை என்றால் மீண்டும் என்னுடைய கணவரின் சொந்த ஊரான சிங்கப்பூருக்கு சென்று விடுவேன்.

நான் தமிழ் திரைப்படங்களில் இப்போது அதிகமாக நடிக்கவில்லை என்றாலும் மற்ற மொழிகளில் நடித்துக் கொண்டிருக்கிறேன். மற்ற மொழிகளில் சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறேன். இப்போது பல வருடம் கழித்து நான் மீண்டும் தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்திருக்கிறேன். மக்கள் இப்போதும் என்னை கிழக்கு சீமையிலே படத்தில் இடம் பிடித்த ஆத்தங்கர மரமே என்ற பாடலை வைத்து அடையாளப்படுத்துகிறார்கள். இது சந்தோஷமாக இருக்கிறது.

ஆனாலும் இந்த சில மனக்கசப்புகள் என் மனதிற்குள் இருந்து கொண்டே இருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தது போல இப்போது நான் இல்லை. இப்போது தைரியமாக மாறிவிட்டேன். எதையும் பார்த்துக் கொள்ளலாம் என்று மன தைரியம் இருக்கிறது. என்னிடம் தவறாக நடந்து டைரக்டர் என் முன்பு வந்தால் கூட அவரிடம் என்னால் இப்போது பேச முடியும் என்று அந்த பேட்டியில் நடிகை அஸ்வினி நம்பியார் என்ற ருத்ரா பேசியிருக்கிறார்.

From Around the web