பெண்கள் என்றால் அவ்வளவு கேவலமா- டாக்டர் படத்திற்கு எழும் எதிர்ப்பு..!

 
டாக்டர் படக்குழு

பெண்களை அவமதிப்பது போல டாக்டர் படத்தில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக பெண்கள் நல அமைப்பினர் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு எதிராக போர்கொடி தூக்கியுள்ளனர்.

நீண்ட காத்திருப்புக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ரிலீஸான முதல் நாளில் இருந்தே படத்துக்கு நல்ல வசூல் கிடைத்து வருகிறது. குறிப்பாக இளைய தலைமுறையினரிடம் இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் டாக்டர் படத்தில் ஒரு காட்சிக்கு பெண்கள் நல அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட காட்சியில் வில்லன் நடிகருக்கு நைட்டி அணிவித்து தலையில் பூ வைப்பது போல காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும், பெண்கள் என்றால் அவ்வளவு கேவலமா என்று அவர்கள் டாக்டர் படக்குழுவுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

ஆண்கள் தவறும் செய்யும் போது, அவர்களை அவமதிப்பதற்கு பெண்கள் உடைகளை போடச் செல்வது, சாலையில் நடக்க வைத்து அசிப்படுத்துவது போன்ற காட்சிகளை சினிமாவில் இடம்பெறுவதை இயக்குநர்கள் தவிர்க்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.
 

From Around the web