கிளாமர் காட்டி நடிக்க வேண்டிய நிர்பந்தம் வந்தால் நடிப்பீர்களா..? பிரியங்கா மோகன் பதில் இது தான்..!
சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன்.சிவகார்த்திகேயனின் டாக்டர் முதல் தனுஷ் உடன் நடித்த கேப்டன் மில்லர் படம் வரை இவரது நடிப்புக்கு தனி வரவேற்பு கிடைத்துள்ளது .இப்படி இருக்கும் நடிகை பிரியங்கா மோகன் இதுவரை நடித்த படங்களில் சுத்தமாக கிளாமர் காட்டாமல் நடித்துள்ளார் .
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற பேட்டி ஒன்றை கிளாமர் காட்டி நடிக்க வேண்டிய நிர்பந்தம் வந்தால் நடிப்பீர்களா என பிரியங்கா மோகனிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது .
அதற்கு கொஞ்சமும் தயக்கமின்றி பதிலளித்த அவர் கூறியதாவது :
வெறும் உடலை காட்டி நடிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. ரொம்ப அதிகமாக கிளாமர் அதாவது உடலை காட்டி நடிப்பது எங்கு சுத்தமாக புடிக்காது.என்னுடன் நடித்த சக நடிகைகளை பார்த்திருக்கிறேன். அவர்கள் கொஞ்சம் கிளாமர் காட்டினாலும் கூட அவர்களை பற்றி அனைவரும் கண்டபடி பேசுகிறார்கள் என நடிகை பிரியங்கா மோகன் தெரிவித்துள்ளார்.