உங்களை நம்பி வரும் பெண்ணை நீங்கள் முழுமை செய்யாதவனாக இருப்பீர்கள் என்றால்...தாம்பத்திய உறவு குறித்து வைரமுத்து பேட்டி..!

 
1

கவிஞர் வைரமுத்து தற்போது ஏ.கோகுல் கிருஷ்ணா இயக்கத்தில் குஞ்சுமோன் தயாரிக்கும் ஜென்டில்மேன் 2 படத்திலும், பாலா இயக்கும் வணங்கான் படத்திலும் பாடல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இது மட்டும் இல்லாமல் சில படங்களிலும் வைரமுத்து கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் வைரமுத்து பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், நம்முடைய வாழ்க்கை எந்த மாதிரியான சுற்றுச்சூழலில் வளர்கிறது என்பதை பார்க்க வேண்டும். ஏழு நட்சத்திர ஹோட்டல்களில் என்னை வெளிநாட்டு நண்பர்கள் தங்க வைத்திருக்கிறார்கள். அங்கு நிறைய பழங்கள், குளிர்பானங்கள், மது பாட்டில்கள் எல்லாம் இருக்கும்.

குறிப்பாக, அதிக விலை உயர்ந்த மதுபானங்கள் இருக்கும். அதை நான் பார்த்து அதனுடைய நிறங்களை வேறுபடுத்தி பார்ப்பேன். அதுதான் எனக்கும் மதுவிற்கும் இடையே ஆன உறவு. காரணம், சிறு வயதில் இருந்தே மதுவால் அழிந்த குடும்பங்களையும், மனிதர்களையும் நான் பார்த்து வளர்ந்து இருக்கிறேன். அவர்கள் படும் அவமானங்கள், குடும்பத்தில் ஏற்படுகிற குழப்பங்கள், பிரச்சனைகள் எல்லாம் பார்த்திருக்கிறேன். நீங்கள் போதை பழக்கத்தில் இருந்து வெளியேறாவிட்டால் உங்களுடைய இல்லற வாழ்க்கை கூட பிரச்சனை ஏற்படும் என்று மருத்துவர்கள் நிறைய சொல்லி இருக்கிறார்கள்.

உங்களை நம்பி வரும் பெண்ணை நீங்கள் முழுமை செய்யாதவனாக இருப்பீர்கள் என்றால் அவளுக்கு நீங்கள் துரோகம் செய்கிறீர்கள் என்று அர்த்தம். ஒரு பெண்ணை நிறைவு, முழுமை செய்வதும் அவளை மதிக்கின்ற ஒன்று. மனைவிக்கு மலர்களை வாங்கி தருவது, தங்கம் வாங்கி தருவது, இனிப்பு வாங்கி தருவது மட்டும் ஒரு கணவனுடைய செயல் இல்லை. உங்களிடம் அவள் என்ன எதிர்பார்க்கலாம் என்பது உங்களுக்கு தெரியும். அதை நீங்கள் முழுமையாக நிறைவேற்ற வேண்டும். அதற்கு போதை பழக்கத்தை விட்டு தயவு செய்து வெளியேறுங்கள்.

நிகழ்கால தாம்பத்தியத்தை அது பாதிக்க விட்டாலும் எதிர்கால தாம்பத்தியத்தை அது கண்டிப்பாக பாதிக்கும். மனைவிக்கு தாம்பத்தியம் குறைப்பட்டு போனால் வாழ்க்கையில் ஒரு குறை வரும். இந்த குறை உங்களை எந்தெந்த துன்பங்களுக்கு கொண்டு செல்லும் என்பது உங்களுக்கே தெரியாது. சில ஆண்கள் மற்றும் பெண்களின் வாக்குமூலங்களை கேட்டு சில துயரங்களை நான் உணர்ந்திருக்கிறேன். அந்த பிரச்சனைக்குள் புதிய தலைமுறைகள் சிக்கிக் கொள்ளக் கூடாது என்று கூறியிருக்கிறார்.

From Around the web