இத மட்டும் நீங்க நிரூபிச்சா நான் சினிமாவை விட்டுப் போக தயார் - மகிழ் திருமேனி..!

விடாமுயற்சி படத்தில் அஜித்குமார் உடன் அர்ஜுன், த்ரிஷா, ஆரவ், ரெஜினா, நிகில் நாயர் உட்பட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களின் காரணமாக படத்தை வெளியிட முடியவில்லை என்று தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் அறிவித்து இருந்தது.
இதைத்தொடர்ந்து விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்பு விடாமுயற்சி படத்தில் இருந்து வெளியான பாடல்கள், டெய்லர் ரசிகர்களில் இடையே நல்ல வரவேற்பை பெற்றன.
இந்த நிலையில், விடாமுயற்சி படம் தொடர்பிலும் அஜித் தொடர்பிலும் மகிழ் திருமேனி கூறிய தகவல்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
அதன்படி அவர் கூறிய பேட்டி ஒன்றில், அஜித் சாருக்கும் எனக்கும் சண்டை என்று பக்கத்தில் இருந்து பார்த்த மாதிரியே பேசுறாங்க.. எதற்காக இப்படி பொய் பேசுறாங்க என்று தெரியல.. ஆனா இத நிரூபிச்சா நான் சினிமாவை விட்டுப் போக தயார் என்று குறிப்பிட்டுள்ளார்.
அஜித்துக்கும் மகிழ் திருமேனிக்கும் சண்டை என வலைப்பேச்சு சேனலில் உள்ள விமர்சகர்கள் தான் தெரிவித்துள்ளார்கள். அவர்களுக்கு சவால் விடும் வகையிலேயே மகிழ் திருமேனி இவ்வாறு தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது..