வெறும் 10 நாட்களில் 13 பேய் படங்களை பார்த்தால் ரூ. 95 ஆயிரம் பரிசு..!

 
ஹாரர் படங்கள்
வரும் அக்டோபர் மாதம் 10 நாட்களில் 13 பயங்கரமான திகில் படங்களை பார்க்கும் பார்வையாளர்களுக்கு ரூ. 95 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என பிரபல நிறுவனம் அறிவித்துள்ளது உலகளவில் கவனமீர்த்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஃபைனான்ஸ்பஸ் நிறுவனம் ஹாரர் மூவி ஹார்ட் ரேட் ஆய்வு என்கிற பெயரில் ஒரு ஆய்வை மேற்கொள்ளவுள்ளது. இதில் 10 நாட்களில் 13 திகில் படங்களை திரையிடப்படவுள்ளன.  அந்த படங்களை பார்க்கும் ரசிகர்களுடைய இதயத்துடிப்பு தொடர்ந்து கண்காணிக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த ஆய்வுக்காக திரையிடப்படும் படங்களுக்கான பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், Saw, Amityville Horror, A Quiet Place, A Quiet Place Part 2, Candyman, Insidious. The Blair Witch Project. Sinister, Get Out, The Purge, Halloween (2018), Paranormal Activity, Annabelle போன்ற படங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த ஆய்வின் மூலம் அதிக பட்ஜெட் திகில் திரைப்படங்கள் பார்வையாளர்களுக்கு அதிகமாக பயத்தை அளிக்கிறதா இல்லையா என்பது முடிவு செய்யப்படும். மேலும் இந்த போட்டியில் அமெரிக்காவில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள்  மட்டுமே பங்கேற்கலாம் என ஃபைனான்ஸ்பஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

From Around the web