62 வயதுக்கு ஜோடியாக நடிக்கும் இலியானா..!
 

 
இலியானா

மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கியுள்ள நடிகை இலியானா தெலுங்கில் 62 வயது பிரபல ஹீரோவுக்கு ஜோடியாக நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தெலுங்கு சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக இருப்பவர் நாகர்ஜுனா. இவர் அடுத்ததாக ப்ரிவீன் சடார் என்பவர் இயக்கும் ‘கோஸ்ட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

முன்னதாக இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு காஜல் அகர்வாலை படக்குழு ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால் தற்போது அவர் கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் அவருக்கு பதிலாக கோஸ்ட் படத்தில் கதாநாயகியாக இலியான நடிக்கிறார். நாகர்ஜுனாவுக்கு ஜோடியாக அவர் நடிப்பது இதுவே முதல்முறை. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளிவரவுள்ளது. 
 

From Around the web