காசு திருப்பி கொடுக்கிறேன்..! ஏ.ஆர்.ரஹ்மானின் ட்வீட் வைரல்..!

 
1

எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று கூறி ஒட்டுமொத்த உலக மக்களின் அதிலும் இந்தியர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டவராக திகழ்ந்து வருபவர் ஏ.ஆர்.ரகுமான்.இவர் படங்களில் இசையமைப்பதை தாண்டி இப்போது அதிகம் இசைக் கச்சேரிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

எல்லா இசையமைப்பாளர்களும் தற்போது இசைக் கச்சேரிகளில்(கான்செர்ட்) அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், சென்னை பனையூரில்.ஆர்.ரகுமானின் மறக்குமா நெஞ்சம் என்ற இசைக் கச்சேரி செப்டம்பர் 10 நடந்தது. 

ஆனால் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிறுவனம் போட்டப்பட்ட இருக்கைகளுக்கு 4 மடங்கு அதிகமாக டிக்கெட் விற்றுள்ளனர். இதனால் கூட்டம் அதிகரித்த நிலையில், நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் உள்ளே செல்ல முடியாமலும், உள்ளே சென்று இருக்கை கிடைக்காமலும் தவித்தனர்.

மேலும் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் பார்க்கிங் வசதியும் சரியாக செய்யப்படாததால், ஈசிஆர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இதனால், மதுரை, கோவை பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் இருந்தெல்லாம் வந்த ரசிகர்கள் நிகழ்ச்சியை காண முடியாமல் அதிருப்தியுடன் திரும்பி செல்லும்  நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் ரசிகர்களிடம் டிக்கெட் நகலை தனக்கு அனுப்புமாறு கேட்டுள்ளார்.

அன்பான சென்னை மக்களே, நேற்று நடந்த இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட்டை வாங்கிவிட்டு துரதிருஷ்டவசமாக கலந்து கொள்ளாமல் திரும்பி சென்றவர்கள் டிக்கெட் நகலை அனுப்புங்கள். அதனை உங்கள் குறைகளுடன் arr4chennai@btos.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். எங்கள் குழுவினர் விரைவில் பதிலளிப்பார்கள்” என தெரிவித்துள்ளார்.


 

From Around the web