”நான் வெளிநாடு போறேன்” சமந்தா ட்வீட்..!

 
நண்பர்களுடன் சமந்தா

இந்தியாவில் பல்வேறு திருத்தலங்களுக்கு சுற்றுலா சென்று வந்த நடிகை சமந்தா, இமயமலை பயணத்தை முடித்துக் கொண்டு வெளிநாடுக்கு பறந்துவிட்டார்.

தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை பிரிந்தவுடன் சமந்தா பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா சென்றார். குறிப்பாக திருத்தலங்களுக்கு அவர் பயணம் செய்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாவில் தொடர்ந்து பதிவிட்டு வந்தார்.

உத்தரகாண்டுக்கு அவர் சென்றிருந்த போது, அருகிலுள்ள ரிஷிகேஷுக்கு தனி ஹெலிகாப்டரில் சென்று அங்குள்ள மகேஷ் யோகி ஆசிரமத்துக்குச் சென்று தங்கினார். அங்கிருந்த துறவிகளுடன் சேர்ந்த வழிபாடும் நடத்தினார். 

இந்நிலையில் இமயமலைக்கு சுற்றுலா சென்றுவிட்டு, நேரடியாக வெளிநாடு புறப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தனது சமூகவலைதளங்களில் புகைப்படம் பதிவிட்டுள்ள அவர், “வெளிநாடு செல்கிறோம்” என்று தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்திருக்கிறார்

தனது நண்பர்கள் சாதனா சிங் மற்றும் புகைப்படக்காரர் ப்ரீதம் ஜூகல்கருடன் விமான நிலையத்தில் சமந்தா காத்திருக்கும் புகைப்படத்தை அவர் பதிவிட்டுள்ளார்.

From Around the web