நிக்குறேன்... உங்கள எதிர்த்து நிக்குறேன்... வெளியான எலக்சன் படத்தின் ட்ரைலர்..!
May 12, 2024, 08:05 IST
உறியடி என்ற படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் படு பேமஸ் ஆனவர் தான் நடிகர் விஜய்குமார்.
நடிப்பு இயக்கம் என இரண்டிலும் தனது முழு உழைப்பை அயராது கொடுத்து வரும் இவரது நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படமே எலக்சன் .
தமிழ் இயக்கத்தில் தயாராகி உள்ள இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது . இந்நிலையில் இப்படத்தின் அடுத்த அப்டேட் என்னவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது எலக்சன் படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது .
கட்சிக்காரனுக்கு அடையாளமே கரவேஷ்டியும் துண்டும் தான் என்ற வசனத்துடன் தொடங்கும் இந்த ட்ரைலரில் அரசியல் கட்சியின் அடிப்படை தொண்டனின் முக்கியத்துவம் குறித்து படம் பேசும் என தெரிகிறது.
இதோ இந்த ட்ரைலர் உங்களுக்காக