ஜெயிக்கிறது என்னைக்குமே என் சொக்கன் தான்..! கருடன் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது..!

 
1

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கால் பதித்து இன்று நாயகனாக தமிழ் திரையுலக கலக்கி வருபவர் தான் நடிகர் சூரி.இவரது நடிப்பில் வெற்றிமாறனின் இயக்கத்தில் வெளியான விடுதலை படம் சூரியின் நடிப்பு திறமையை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியது.

இந்நிலையில் இவரது நடப்பில் தற்போது இரு புதிய படம் உருவாகி உள்ளது. சூரி நாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு கருடன் என பெயரிடப்பட்டுள்ளது .

வெற்றிமாறனின் கதையில் எதிர்நீச்சல் புகழ் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம் தேனி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

நடிகரும் இயக்குநருமான சசிகுமார் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இவர்களுடன் சமுத்திரகனி,உன்னிமுகுந்தன் ரேவதி சர்மா ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில் கருடன் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் முதல் தோற்றத்துடன், கிளிம்ப்ஸ் வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

From Around the web