நான் யாருக்கும் அறிவுரை சொல்லவில்லை... என் அனுபவத்தை தான் ஷேர் செய்கிறேன்..!

 
1

 பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ராவும், கோபி கதாபாத்திரத்தில் நடிகர் சதீஷும் நடித்து வருகின்றனர்.

அந்தவகையில் கோபியின் நடிப்பிற்கு வேறு யாரும் இணையில்லை என்று கூறுமளவிற்கு பல ரசிகர்களை கவர்ந்திருக்கின்றார். இதற்கு முன்னர் இவர் பல்வேறு சீரியல்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு பெயரையும் புகழையும் சேர்த்தது 'பாக்கியலட்சுமி' சீரியலில் இவர் நடித்த கோபி கதாபாத்திரம் தான்.

பாக்கியாவுடன் இருக்கும்போது அவர் வில்லத்தனமாக ஒரு கெத்துடன் காணப்பட்டார். ஆனாலும் ராதிகாவை கல்யாணம் பண்ணினதன்  பின்னர் அவர் ஒரு கோமாளியாகவும் அவர் செய்யும் திருட்டு வேலைகளும் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஆனாலும், நடிகர் சதீஷ் அடிக்கடி தனது சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களையோ அல்லது வீடியோக்களையோ வெளியிட்டு வருவார். 

இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் மக்களுக்கு அட்வைஸ் சொல்லும் நடிகர் சதீஷ், தற்போது மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதாவது, ரசிகர்களுக்கு சதீஷ் ஓவராக அட்வைஸ் செய்வதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்த நிலையில், அதற்கு ஒரு வீடியோவை வெளியிட்ட சதீஸ், 'நான் ஒரு டம்மி பீஸ். ஏதோ இந்த சூழ்நிலையில் ஆண்டவன் அருளால் பாக்கியலட்சுமி சீரியல் மூலமாக பெயரும் புகழும் வந்திருக்கு. நான் யாருக்கும் அறிவுரை சொல்லவில்லை, என் அனுபவத்தை தான் ஷேர் செய்கிறேன்' என கூறியுள்ளார்.

From Around the web