நான் பொய் சொல்லல... நான் ஊசி போட்டு நடிச்சிட்டு இருக்கேன் : ரோபோ ஷங்கர்..! 

 
1
நடிகர் ரோபோ சங்கர் மகள் இந்திரஜாவின் திருமண கொண்டாட்டம் தற்போது கலை கட்டி வருகிறது. சமூக வலைதள பக்கங்களில் இந்திரஜாவின் திருமண கொண்டாட்ட புகைப்படங்கள் தான் வைரலாகி வருகின்றன.

இவ்வாறு தனது மகளின் திருமண கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்தாலும், இன்னொரு பக்கம் ஷூட்டிங் பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார் ரோபோ சங்கர்.

இந்த நிலையில் , கேன் பட படப்பிடிப்பிற்காக ஊட்டியில் நடித்து வரும் இவர், இயக்குனர் ஆடம்ஸ் தங்களை கொடுமைப்படுத்துகிறார் என்பது போல என்று பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, ஷூட்டிங்காக ஊட்டி வந்தால் காலையில் எத்தனை மணிக்கு கூப்பிடனும்? மெட்ராஸ்லையே பனிக்காலம் என்றால் கண்ட இடமெல்லாம் குளிருது. கை, கால் எல்லாம் சுருங்கி போகுது. ஆனால் காலை 6 மணிக்கு எல்லாம் சூட்டிங் கூப்பிடுகிறார். என்னை மட்டும் இல்லை. ஸ்ரீமன் அண்ணன், தம்பி ராமையா, கோவை சரளா, மாறன் அண்ணன், கலையரசன், என அனைவரையும் கூப்பிட்டு உட்கார வைத்துள்ளார். கோவம் தான் வருது எனக்கு. நான் ஊசி போட்டுக்கிட்டு நடிச்சிட்டு இருக்கேன். நான் பொய் சொல்லல. பொய் சொன்னா எனக்கு பிடிக்காது என்று ஊசி போடப்படும் இடத்தையும் வீடியோவில் காட்டியுள்ளார் ரோபோ சங்கர்.

மேலும் வெள்ளத்தில் கால் அடிபட்டு கால் வீங்கி இருக்கு. இருந்தாலும் நடிக்க வந்திருக்கன். ஆனா காலைல 6 மணிக்கு ஆரம்பிச்சு மறுநாள் 6 மணி வரையில் ஷூட்டிங்ல நடிக்கணும் என இயக்குனர் சொல்றாரு..  ஏன் பகலில் மேட்ச் பண்ணி எடுக்கத் தெரியாதா? படத்தோட டைட்டில் கேட்டா சொல்ல மாட்டேங்குறாரு, டைம் கரெக்டா சொல்ல மாட்டேங்குறாரு, சோத்த வாயில வைக்கிற நேரத்துல கூப்பிடுறாரு, வாயில வச்ச உடனே போங்கன்னு சொல்லுறாரு...ஏன் தான் இப்படி பாடா படுத்துறாரோ? 

இவன் ஆஸ்கர் விருது எடுக்கவா படம் எடுக்கிறான்? ஆடியன்ஸ்காக தானே படம் எடுக்கிறார். தம்பி ஆசைப்பட்டு கூப்பிட்டான்னு வந்துட்டேன். அந்த பொம்பளையும் பாவம் பக்கத்து ஹாஸ்பிடல் இருந்து வந்து அப்பப்ப ஊசி போட்டுட்டு போகுது. நானும் அப்படியே ஊசியை போட்டுட்டு போட்டுட்டு நடிச்சிட்டு இருக்கேன் .

இவ்வாறு எல்லாரையும் கொடுமைப்படுத்தி நடிக்க வச்சுட்டு இருக்காரு என பேசிக்கொண்டே இருக்கும் போது இதோ வந்து தொலைக்கிறேன் என சொல்லி செல்கிறார்.

ஆனாலும், இறுதியில் இந்த வீடியோ கேன் படத்தின் ப்ரமோஷனுக்காக எடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

From Around the web