ஆதாரம் இல்லாமல் நான் சொல்லவில்லை... பயில்வானின் மகள் ஒரு காதலிப்பது ஒரு பெண்ணை - ஷகிலா..! 

 
1

பாடகி சுசித்ரா அளித்த பேட்டியில் தனது கணவருடன், தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்களான தனுஷ், விஜய், அஜித் இவர்களை மட்டும் இன்றி ஷாருக்கானையும் வம்பு இழுத்து இருந்தார். இதை தொடர்ந்து பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் குமார் நீதிமன்றத்தில் வழக்கை தொடர, அது சுசித்ராவுக்கு எதிராக தீர்ப்பளிக்கப்பட்டது.

மறுபக்கம் பிரபல திரைப்பட விமர்சகரும் நடிகரும் யூடுயூபருமான பயில்வான் ரங்கநாதன் மற்றும் ஷகீலாவுக்கு இடையிலும் வாக்குவாதம் இடம்பெற்றது. இதை தொடர்ந்து இருவருமே மாறி மாறி கருத்துக்களை பரிமாறி வந்தார்கள்.

மேலும் பிரபல டிவி சேனல் ஒன்றில் ஷகிலாவும் பயில்வானும் கலந்து கொண்ட நிலையில். பயில்வானின் மகள் ஒரு லெஸ்பியன் என்ற சொல்லியிருந்தார் ஷகிலா. இதை தொடர்ந்து சர்ச்சை கருத்துக்கள் வைரலாக, அதற்கு பதிலளித்த பயில்வான் அங்கு நடந்தவற்றை எடிட் செய்து போட்டு விட்டார்கள். ஷகீலா குடும்பமாகவா வாழ்கிறார்? என அவரை தாறுமாறாக திட்டி இருந்தார்.  

இதைத்தொடர்ந்து ஷகிலாவும் பயில்வான் இப்படி கதைக்கும் போது நான் வெளிநாட்டிலிருந்தேன்.  இல்லையென்றால் நடந்திருப்பது வேறு என அவரும் பதிலடி கொடுத்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது இவர்கள் இருவருக்கும் நடுவில் சுசித்ராவையும் வெளுத்து வாங்கியுள்ளார் ஷகிலா. அதன்படி அவர் கூறுகையில்,

பயில்வான் எப்படி சினிமாவை அசிங்கப்படுத்துகிறாரோ அதேபோல சுசித்ராவும் சினிமாவை அசிங்கப்படுத்துகிறார். அந்த நடிகர் பாட்டி வைப்பார், சரக்கு அடிப்பார் என்று பேசுகிறார் சுசித்ரா. அப்போ அவரும் கலந்து கொண்டதால் தான் அப்படிப்பட்ட விஷயங்களை அவர் சொல்லுகிறார்.

அவரது முன்னாள் கணவருக்கும் இவருக்கும் இருக்கும் பிரச்சனை பற்றி பொதுவெளியில் அவர் தாராளமாக பேசலாம். அதை விட்டு வீட்டுக்குள் அது நடக்கிறது. இது நடக்கிறது என்று ஏன் பேச வேண்டும்.  ஆக மொத்தம் இரண்டுமே இரண்டு பேருமே சினிமாவை கேவலப்படுத்தி வருகின்றார்கள்.

என்னை ஒரு பேட்டியில் அசிங்கப்படுத்திய பயில்வான், நான் ப்ளூ ஃபிலிம் நடித்தேன் என்று சொன்னார். அது ப்ளூ ஃபிலிம் இல்லை. முதலில் அதை தெரிந்து கொள்ள வேண்டும். நான் இத்தனை நாட்களாய் பயில்வானனை அண்ணா என்று அழைத்தேன். இந்த பேட்டியில் தான் அவரை நீ என்று சொன்னேன். என்னை அசிங்கமாக திட்டினார். என்னாலும் அவரை அசிங்கமாக திட்ட முடியும் ஆனால் நான் அவரது அம்மாவை அசிங்கப்படுத்த விரும்பவில்லை.

மேலும் பயிர்வானின் மகள் ஒரு பெண்ணை காதலிக்கிறார் என்று நான் சும்மா சொல்லவில்லை. அப்படி சொல்லவும் முடியாது நான் கண்ணால் பார்த்ததை தான் சொல்கின்றேன். பயில்வான் வீட்டு மாடியில் இருக்கும் ஒரு தோழி ஒருவரின் வீட்டுக்குச் சென்றபோது தான் பயில்வானின் மகளை பார்த்தேன். ஆதாரம் இல்லாமல் நான் எதையும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை அவர்தான் மற்றவர்களை பற்றி பேசி பிழைப்பு நடத்தி வருகிறார். இப்படி ஒரு  ஈனப்பிழைப்பு தேவையா என்று பேசி உள்ளார்.

From Around the web