சொல்றது தம்பி... கொடுக்கிறது முத்தமா ? பிக்பாஸ் வீட்டின் காதல் கதையை விமர்சித்த நடிகை!  

 
1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் வீட்டில் இந்த சீசனில் மொத்தம் 18 போட்டியாளர்கள் முதலில் பங்கேற்றனர். அவர்களில் பவா செல்லதுரை தானாகவே வெளியேற அனன்யா, விஜய் வர்மா உள்ளிட்டோ எவிக்ட் செய்யப்பட்டனர். அதன் பிறகு வைல்ட் கார்டு ரவுண்டு மூலம் கானா பாலா, தினேஷ், அன்னபாரதி, அர்ச்சனா, டிஜே பிராவோ ஆகிய ஐந்து பேரும் உள்ளே வந்தனர். அந்த ஐந்து பேரும் வந்ததும் ஏற்கனவே வீட்டில் இருந்தவர்களுடன் அவர்களுக்கு கொஞ்சம் உரசல் ஆரம்பித்தது.

குறிப்பாக பூர்ணிமாவுக்கும் தினேஷுக்கும் முட்டிக்கொண்டது. அதேபோல் மாயாவிடம் தினேஷ் நான் உங்களை பேசவே கூப்பிடவில்லையே பிறகு ஏன் வருகிறீர்கள் என கேட்க; வைல்டு கார்டு மூலம் உள்ளே வந்தவர்களை பூர்ணிமா டார்கெட் செய்கிறார் என்று அர்ச்சனா பேச தினம் ஒரு கண்டெண்ட்டோடு நகர்ந்துகொண்டிருக்கிறது. இதற்கிடையே பிக்பாஸ் வீட்டில் இன்னொரு கூத்தும் நடந்தது. அதாவது நிக்சனும், ஐஷுவும் கண்ணாடி வழியாக முத்தம் கொடுத்துக்கொண்டனர். இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அதிலும் நிக்சனை தம்பி தம்பி என்று அழைத்து வந்த ஐஷு திடீரென அவரை தம்பி ஸ்தானத்திலிருந்து இறக்கி உதட்டோடு உதடு முத்தம் கொடுப்பது போல் நடந்துகொண்டதை பார்த்த ரசிகர்கள் ஆஹா இன்னொரு மருத்துவ முத்தம் விவகாரமோ என கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்தனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகையும் பிக்பாஸ் முன்னாள் போட்டியாளருமான சனம் ஷெட்டி கூறுகையில், “நிக்சனை ஐஷு தம்பி தம்பி என சொல்லிவிட்டு அவருக்கு இப்போது முத்தம் கொடுப்பது கேவலமாக இருக்கிறது.

அவர்களின் இந்த செயல் உறவு முறைகளையே கேவலப்படுத்துவது போன்று இருக்கிறது” என குறிப்பிட்டிருக்கிறார். முன்னதாக பிக்பாஸின் முதல் சீசனில் ஆரவ் ஓவியாவுக்கு முத்தம் கொடுத்தார். அந்த முத்தத்தின் மூலம் மருத்துவ முத்தம் என்ற வார்த்தை பிரபலமானது. தற்போது இந்த சீசனில் நிக்சனும் ஐஷுவும் முத்தம் கொடுத்துக்கொண்டார்கள்.

இதுவும் அனைவரிடமும் பேச்சுப்பொருளாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கடந்த் அவாரத்தில் வினுஷாவும், யுகேந்திரனும் எவிக்ட் ஆனார்கள் என்பது நினைவுகூரத்தக்கது. முன்னதாக ஐஷு கொடுத்த முத்தத்தை அடுத்து நிக்சன் முத்தம் கொடுக்க வந்தபோது இதையெல்லாம் நீ ஏன் செஞ்ச என்று வீட்டில் கேட்டால் சேனல்தான் அப்படி செய்ய சொன்னாங்கனு சொல்லிடு என கூறியதை பார்த்த பலரும்; என்ன நிக்சன் பலே கில்லாடியா இருக்காரே என்றும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தெரிவித்தது கவனிக்கத்தக்கது.


 

From Around the web