ரோகிணிக்கு முக்கியத்துவம்...பின்னுக்கு தள்ளப்பட்ட சிறகடிக்க ஆசை..!
 

 
1

சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் உள்ளிட்ட டிவிக்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் டிஆர்பி ரேட்டிங் ஒவ்வொரு வாரமும் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது வெளிவந்துள்ள ரேட்டிங் குறித்து பார்ப்போம்.

இந்த வாரம் ’கயல்’ சீரியலை மீண்டும் பின்னுக்கு தள்ளிவிட்டு ’சிங்கப்பெண்ணே’ முதலிடத்தை பிடித்துள்ள நிலையில் ’கயல் ’மீண்டும் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன் சன் டிவியில் தொடங்கப்பட்ட ’மருமகள்’ என்ற சீரியல் இந்த வாரம் மூன்றாவது இடத்தை பிடித்தது தான் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் சில வாரங்களில் இந்த சீரியல் முதலிடத்தை பிடித்தாலும் ஆச்சரியம் இல்லை. இதனை அடுத்து நான்காவது இடத்தில் ’வானத்தைப்போல’ சீரியல் உள்ளது

கடந்த வாரம் நான்காவது இடத்தில் இருந்த ’சிறகடிக்க ஆசை’ இந்த வாரம் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த சீரியலின் இயக்குனர், ரோகிணிக்கு முக்கியத்துவம் கொடுத்து  முத்து மீனாவை கண்டு கொள்ளாமல் இருப்பதால்தான் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் பின்னுக்கு தள்ளப்பட்டதாக புறப்படுகிறது.

இந்த வாரம் ஆறாவது இடத்தில் ’மல்லி’ சீரியல் உள்ளது என்பதும் ஏழாவது இடத்தில் ’சுந்தரி 2’ சீரியல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 8வது இடத்தில் ’பாக்கியலட்சுமி’ ஒன்பதாவது இடத்தில் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ மற்றும் பத்தாவது இடத்தில் ’ஆஹா கல்யாணம்’ ஆகிய சீரியல்கள் உள்ளன.

From Around the web