ஜகமே தந்திரம் படம் குறித்து வெளியான முக்கிய அப்டேட்... குஷியான ரசிகர்கள்..!

 
ஜகமே தந்திரம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ படம் தொடர்பான முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்துக்கு பிறகு, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. இதி தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ளார், மலையாள சினிமாவின் முன்னணி நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி கதாநாயகியாக நடித்துள்ளார்.

ரசிகர்களிடையே மிகப்பெரியளவில் எதிர்பார்க்கப்பட்டு வந்த இப்படம் வரும் ஜூன் 18-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

முன்னதாக சந்தோஷ் நாராயணன் இசையில் ஜகமே தந்திரம் படத்தில் இடம்பெற்றுள்ள ‘ரகிடா ரகிடா’ மற்றும் ‘புஜ்ஜி’ போன்ற பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. அதை தொடர்ந்து இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘நேத்து’ என்கிற பாடல் வரும் மே 22-ம் தேதி வெளிவரவுள்ளது. 

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் இந்த படம் வெளிவரவுள்ள நிலையில், ‘நேத்து’ பாடலும் இரு மொழிகளிலும் வெளிவரவுள்ளது. 

From Around the web