மணிரத்னத்தின் நவரஸா குறித்து வெளியான முக்கிய அப்டேட்..!

 
நவரஸா வலை தொடர்

மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘நவரஸா’ வலை தொடரின் ரிலீஸ் அப்டேட் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அதுதொடர்பான தகவல்களை பார்க்கலாம்.

நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திற்கான இயக்குநர் மணிரத்னம் தயாரித்து வரும் படம் ‘நவரஸா’. ஒன்பது கதைகள் கொண்ட ஆந்தாலஜி வலை தொடராக இது தயாராகிறது. மனிதனின் ஒன்பது உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு தயாராகும் இந்த வலை தொடரில் கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், கே.வி. ஆனந்த், கவுதம் மேனன், பிஜாய் நம்பியார், பொன்ராம், அரவிந்த்சாமி உள்ளிட்ட 9 பேர் ஒவ்வொரு கதைகளை இயக்கி வருகின்றனர்.

அதேபோல ஒவ்வொரு தொடரிலும் தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்களான சூர்யா, விஜய்சேதுபதி, அரவிந்த் சாமி, பாபி சிம்ஹா, சித்தார்த், பிரகாஷ் ராஜ், கெளதம் கார்த்திக், அசோக் செல்வன், விக்ராந்த், ரோபோ சங்கர், நித்யா மேனன், பார்வதி, அம்மு அபிராமி, பூர்ணா, ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்விகா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இதற்கான படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் ஆகஸ்டு மாதம் ‘நவரஸா’ வலை தொடர் நெட்ஃப்ளிக்ஸ் ஒ.டி.டி தளத்தில் வெளியாகவுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

From Around the web